பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 நினைவு அலைகள் இனிய சொற்களால் ஒப்பனை செய்து மூடிக்காட்டும் கலை எனக்குத் தெரியாது. அப்பட்டமான உண்மையே என்னிடம் இருந்து வெளியாகும். எக்காலத்திலும் இத்தகைய இயல்பைப் பெரும்பாலோர் வெறுப்பர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் இதைவிடப் பெரிய தீங்கை ஒருவர்தம் வாழ்வில் பெற முடியாது. பலர், குட்டுப்பட, குட்டுப்படக் கெட்டிக்காரர்களாகி விடுவார்கள். எரிச்சல் ஊட்டுமென்று அய்யப்பட்டால், அதைப்பற்றிப் பேச மாட்டார்கள். அத்தகைய கெட்டிக்காரத்தனத்தை நான் கற்றுக் கொள்ளவே இல்லை. பெரியார், அண்ணா,காமராசர் போன்ற உண்மை நாடிகளோடு, நெருங்கி இருந்துவிட்டதால், குட்டுப்பட்டு மாற எனக்கு வாய்ப்பே இல்லாமற் போய்விட்டது. பெரியாருக்கு ஆலோசனை அது இருக்கட்டும்; தஞ்சையில் என் வீட்டில் பெரியாரோடு பேசிய பொருளுக்குச் செல்வோம். 'அய்யா! புத்தருக்குப் பிறகு, தாங்கள்தான் மக்கள் சமுதாயத்தின் சிந்தனைகளை, வாழ்க்கை முறைகளை, அடிதெரியக் கலக்கி வருகிறீர்கள். 1930ஆம் ஆண்டின் குடிக் கணக்கிலேயே, தமிழ்நாட்டில் சில இலட்சம் பேர்கள், சாதி இல்லை சமயம் இல்லை' என்று அறிவித்த பெருமை தங்களுக்கும் தன்மான இயக்கத்திற்கும் சேரும். 'இத்தனை கலப்பு மணங்கள், சடங்கு ஒழித்த வாழ்க்கை ஒப்பந்தங்கள், ஏன் - ஒரே பந்தி உணவு ஆகியவற்றை இதுவரை எவரால் செய்ய முடிந்தது? சாதியொழிப்பிலும் மூட நம்பிக்கையிலும் சமதர்மக் கொள் கையைப் பரப்புவதிலும் தங்கள் இயக்கம் வெற்றி நடைபோட்டு வருகிறது. 'இந்தச் சூடு அதிகமாகும் என்று நலிந்தோரும் தாழ்ந்தோரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "தெருவில் உருண்டபடியே பிச்சை எடுப்பது நின்று விட்டது. 'தங்கள் காலத்தில் சமத்துவமும் சமதர்மமும் வந்துவிடுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால், பெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கி வரும் தாங்கள், அண்மையில் கட்சிக்குத் தலைவராகிவிட்டதைப் பற்றி என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்கக் கறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/711&oldid=787709" இலிருந்து மீள்விக்கப்பட்டது