பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. தன்னிறைவு வாழ்க்கை என் வருவாய் தந்தை பெரியாரை விருந்துக்கு அழைத்து, அவருக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்தபிறகு, அவருக்குக் கஞ்சி மட்டுமே கொடுத்தனுப்பிய நான் சிறியேன். மிகச் சிறியேன், உலகத்தின் கண்ணோட்டத்தில். கொள்கையாளனுக்கும், வாய்மையாளனுக்கும், நேர்மையாளனுக் கும், அறிவாளிக்கும், நல்லவனுக்கும், வல்லவனுக்கும் ஆங்காங்கே யாகிலும் நாட்டில் மதிப்பு இருந்த காலம் அது. இருப்பினும், பணத்தை மதிக்காத காலம் என்று சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட காலத்தில், பெரியாருக்கு வேண்டிய செல்வர்கள் பலர், தஞ்சையில் இருப்பினும், என் வீட்டிற்கு வந்து, உண்ண ஒப்புக் கொண்டது அவருடைய பெருந்தன்மை. அவரது இயக்கம் வளர்ந்ததற்கான இரகசியம் அதனுள் அடங்கியுள்ளது. பெரியாருக்கு விருந்து ஆயத்தம் செய்தது. எனக்குப் பெரும் சுமையா? இல்லை. அதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். அது அக்காலப் பொருள் நிலையை விளக்கிக் காட்டும். இளந்துணை ஆய்வாளனாகிய எனக்குத் திங்கள் ஊதியம் ரூபாய் அய்ம்பதே. சம்பளத்துக்குமேல் கிம்பளம் இல்லை. அப்படிக்கிம்பளம் வாங்கும் போக்கும் எந்நாளிலுமில்லை. ஆனால், அரசு கொடுத்த கட்டைப் பயணப்படியில், திங்கள் தோறும் அய்ந்தாறு ரூபாய்கள் மிஞ்சும். என் வருவாய் அய்ம்பத்தாறு ரூபாயென்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் ஒரு பகுதிக்கு அல்ல, தனி வீட்டிற்கு இல்லை. பங்களா வளவிற்குள் சிறு பங்களாவுக்கு, நான் கொடுத்த வாடகை பத்தே ரூபாய். இத்தகையவற்றில் அக்கால மக்களிடம் இன்றைக்கு இருப்பதைவிட அதிகப்படியான நியாய உணர்வு இருந்ததாக என் மதிப்பீடு. இக்காலத்தில் மக்கள் அனைவரையும் பிடித்தாட்டும் 'திடீர்ட் பணக்காரராகும் நோய், நாற்பதாண்டுகளுக்கு முன் மிகமிக அரிதாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/714&oldid=787712" இலிருந்து மீள்விக்கப்பட்டது