பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு G77 இல்லந்தோறும் பயிரிடுவீர் எனவே, தாய்நாட்டில் பற்றுடையவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருவரும் செயல்படும் அணில்களாக மாறவேண்டும். எதில் எதிலோ பொழுது போக்குவதை விடாவிடினும், குறைத்துக்கொண்டு இல்லந் தோறும் காய்கறி, கீரை வகைகள் பயிரிட வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். - ஒவ்வோர் ஊரும் தன் காய்கறித் தேவைகளில் கால், அரை பங்கையாவது, நிறைவேற்றிக் கொண்டால், அவற்றை நெடுந்துாரம் சுமந்து செல்ல நேரிடாது. அதற்கான செலவு குறைவதால் விலை வீழும். காந்தியடிகள் கற்பித்த தன்நிறைவுக் கோட்பாடு, பலர் நினைப்பதுபோல் பத்தாம்பசலிக் கொள்கையன்று. அதே நேரத்தில், அது சொல்லுக்குச் சொல், வைதீகப் பொருள் கூறி, உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வாதாட வேண்டிய கருத்தும் அன்று. அது ஒரளவு ஒவ்வொருவரும் பின்பற்றக்கூடிய எளிய செயல்முறையாகும். நகரங்களில் உள்ள பங்களாவாசிகளுக்கு காந்தியை விரும்பினாலும் வெறுத்தாலும் அவரவர் தேவைக்குப் பயிரிட்டுச் சாப்பிடுவது விபரீதமல்ல; மற்ற வேலையை விட்டு விடாமலே, ஒய்வுநேர உதவியாகச் செய்யலாம் என்பதை உணர்ந்தால், அகவிலை நோய் முற்றாமலாவது இருக்கும். வீணான வி ழாச்ெ 5F6oog உலகில் விழாக்களுக்குச் செலவு செய்யக் கடன்பட்டுக் கெட்டவர்கள் இந்தியர்கள் ஆவர். அவர்களில், முதற் பரிசுக்கு உரியவர் எவர்? நாமே; தமிழர்களாகிய நாமே. இந்தியர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். பக்தி யில் தமிழ்நாட்டிற்கு அப்பால் வாழும் இந்துக்கள், நமக்கு இளைத்தவர்கள் அல்லர்: திருமணம் முதலிய சடங்குகளைச் செய்வதில், நமக்குச் சளைதத வாகன அலலா. சமயத் திருவிழாக்களைக் கொண்டாடுவதில், அவர்கள் நம்மிலும் ஆர்வம் குன்றியவர்கள் அல்லர். தமிழருக்கு இருக்கும் பக்தியைவிட மற்ற இந்துக்களின் பக்தி, தரம் குறையாவிட்டாலும், நாம் அழிக்கும் பொருள் அளவு அவர்கள் அழிப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/718&oldid=787716" இலிருந்து மீள்விக்கப்பட்டது