பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68O நினைவு அலைகள் பணியாள் சென்றார்; சொன்னார்; திரும்பி வந்தார். என்ன பதில் கொண்டு வந்தார்? 'பார்க்க இயலாது' என்னும் பழைய பதிலையே கொண்டு வந்தார். அரசு ஊழியத்தில் சேர்ந்துவிட்டதால் இன்னும் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று கலங்கினேன். பொறுத்தார் பூமியாள்வார் என்னும் பழமொழி நோய் தணிக்கும் மருந்தாக மின்னிற்று. உணர்வினை அடக்கிக்கொண்டு விடு திரும்பினேன். அவமதிப்புக்குக் காரணம் அடுத்த நாள் அலுவலகத்திற்குள் நுழைந்தேனோ இல்லையோ, பலர் துக்கம் விசாரிக்கச் சூழ்ந்து கொண்டார்கள். ஊர் வாயை மூட உலைமூடி ஏது? 'அப்போதே நினைத்தேன்! நீங்கள் பெரியாரை உங்கள் விட்டிற்கு அழைப்பது சரியல்ல. அது உங்கள் வேலைக்குக் கேடாக வரும். அதைச் சொன்னால், நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று பேசாமல் இருந்து விட்டேன்' என்று ஒருவர் இழுத்தார். மற்றொருவர் அவர் பேச்சில் குறுக்கிட்டார். அவர், 'பெரியார் தங்கள் வீட்டுக்கு வந்த மறுநாளே, மொட்டைக் கடிதங்கள் போய் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த ஊர் அப்படிப்பட்ட ஊருங்க. என் வாயால் அச்செய்தியைப் பரப்ப விரும்பவில்லை. பொறுத்துப் பார்ப்போம் என்று இருந்தேன். என்றார். மூன்றாவது ஆள், "மொட்டைக் கடிதம் பற்றிக் கேட்கவென்றால், பள்ளித் துணை ஆய்வாளர் வழியாகவே, உங்களுக்குச் சொல்லி அனுப்பியிருப்பார். நேராகச் சொல்லி அனுப்பியதில் இருந்து, அதைப்பற்றி இராது, என்று ஊகிக்கலாம். 'உங்களுக்கு நெருக்கமான பெரியாரின் பரிந்துரையும் தயவும் எதற்காகிலும் கல்வி அலுவலருக்குத் தேவைப்படலாம். அதைத் தேடவே, உங்களை அழைத்து இருக்கலாம் என்று என்னைப் பெருமைப்படுத்த முயன்றார். 'அப்படியிருந்தால், நுழைவாயிலுக்கு வெளியே இருந்தபோதே, திரும்பிப் போகச் சொல்லியிருக்க மாட்டார். 'ஏதாவது மொட்டைக் கடிதம் பற்றிக் கேட்கவே அழைத்திருப்பார் என்று தோன்றுகிறது' என்று அச்சமூட்ட முயன்றார், இன்னும் ஒருவர். 'மெளனம் கலகநாசம் என்பது தெரியும். எனவே ஊமையாகிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/721&oldid=787720" இலிருந்து மீள்விக்கப்பட்டது