பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு Ꮾ81 மாவட்டக் கல்வி அலுவலர் மீண்டும் அழைப்பாரென்று எதிர்பார்த்தேன்; ஏமாந்தேன். அவர் அழைக்கவில்லை. புதிர் விடுவிக்கப்படவில்லை. காந்தம்மாவுக்கு வேலை கிடைத்தது எதிர்பார்த்த மற்றொன்று வந்து சேர்ந்தது. அது என்ன? நியமன ஆணை. யாருக்கு நியமனம்? என் மனைவிக்கு நியமனம். என்ன பதவிக்கு நியமனம்? ஆசிரியை பதவிக்கு. என் மனைவி ஆசிரியைப் பயிற்சியை முடிக்கும் தருணம், சென்னை தியாகராயநகர், சாரதா வித்யாலயத்திற்குப் பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்பட்டார்கள். அப்பள்ளியின் சார்பில், சகோதரி சுப்புலட்சுமி அம்மையார், வெல்லிங்டன் சீமாட்டிப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றார். பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பலரைப் பேட்டி கண்டார். அம்மையார், தாவர இயலுக்கு என் மனைவி காந்தம்மாவையும், கணக்கிற்கு திருமதி பத்மலோசினி இராதாகிருஷ்ணனையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார். உயர்நிலைப்பள்ளித் தாளாளர், திரு. வாசுதேவாச்சாரியார் உரிய ஆணையை அனுப்புவார் என்று சொல்லி விட்டுப் போனாராம். எனவே, என் மனைவி நியமன ஆணையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். H 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவதற்கு 'ப் பழகிவிட்ட நான், வேறு வகைக்கு என்னுடைய மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் என் மனைவியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நியமன ஆணை வந்தது. அப்பதவி நிலையான பதவி. அந்தத் தகவல் எங்கள் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கியது. என் மனைவிக்கு ஆணை வந்ததுபோல, திருமதி. பத்மலோசி னிக்கும் வந்தது. அந்த அம்மாள் அவ் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தபின், அரசு ஊழியத்தில் போய்ச் சேர்ந்தார். திறமையும் நேர்மையும் இருந்தும் வாய்ப்புகள் குறைந்த காலத்தில் கல்வித் துறையில் பணிபுரிந்த பத்மலோசினி அம்மாள், பெண்கள் பள்ளி ஆய்வாளர் நிலையளவு உயரவே வழி கிடைத்தது. தகுதியிருந்தும், பதவி உயர்வுகள் நிறையக் கிடைக்காவிடினும், மாணவிகளின் பெற்றோர்கள் நன்மதிப்பைத் தொடர்ந்து பெற்று வந்தார், பத்மலோசினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/722&oldid=787721" இலிருந்து மீள்விக்கப்பட்டது