பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 நினைவு அலைகள் இயக்குநர், புள்ளி விவரங்களைப் பார்க்கும் ஜாம்பவான் திரு. சுப்பிரமணியத்தைக் கேட்டார். அப்புள்ளிவிவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து திரட்ட வேண்டுமென்று சொல்லிவிட்டு அதற்காக, உடனடி நடவடிக்கை எடுப்பதாக அரசுக்குப் பதில் எழுதிக்கொண்டு இயக்குநரிடம் வந்தார். திரு. கோவிந்தராஜுலுக்கு அவை நிறைவு கொடுக்கவில்லை. துணை இயக்குநராகிய என்னை அழைத்தார். உடனே தகவல் திரட்ட ஏதாவது செய்ய முடியுமாவென்று கேட்டார். 'தயவுசெய்து, அலுவலக யோசனை ஒட்டிய பதிலை அமைச்சருக்கு அனுப்ப வேண்டாம். நான் சில மணிகளில் தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கிறேன்' என்றேன். புள்ளிவிவரப் பட்டியல்களைப் பார்க்கும் அலுவலக மேற்பார்வை யாளரை அழைத்தேன். உரிய பட்டியலின் எண்ணிக்கையையும் தலைப்பையும் சொல்லி, அதைக் கொண்டு வரும்படி கூறினேன். பதினைந்து மணித் துளிகளில் இருபத்து நான்கு பட்டியல்களோடு வந்து சேர்ந்தார். அவற்றை வாங்கி, எண்களை நான் சொல்ல, அவர் எழுதிக் கொண்டு வந்தார். இறுதியில் அவர் கூட்டிச் சொன்னதை நான் சரி பார்த்தேன். அக்கணக்கை இயக்குநரிடம் கொண்டுபோய்க் கொடுத்தோம். அடித்தள அற்ப வேலைகள் எனக்குத் தெரிந்திருப்பதைப் பற்றி அலுவலகம் முழுவதும் பேசத் தலைப்பட்டார்கள். + அலுவலக எழுத்தர்களும் மேற்பார்வையாளர்களும் என்னை அதிகமாக மதித்தார்கள். விளைவு? நான் பொதுக்கல்வி இயக்குநராக இருந்த பதினோர் ஆண்டுகளில், எவரும் ஏனோதானோவென்று பதில் சொல்லி ஏய்க்கவில்லை. இதைச் சொல்வது என்னுடைய பெருமைக்காக அல்ல. இயற்கை அறிவு மிகுதியாயிருப்பினும், அது பட்டறிவால் பெறும் நிர்வாக அறிவுக்கும் அலுவல் ஆற்றலுக்கும் ஈடாகாது. பட்டறிவைக் கடுமையான 'சின்ன வேலைகளில் பெறவேண்டும். பிந்தியதை எவ்வளவு அதிகமாக வளர்த்துக் கொள்கிறார்களோ அவ்வளவுக்கு எதிர்காலத்திற்கு ஏற்றம். இப்பாடத்தை என்னுள் புதைத்து வைத்துவிடக் கூடாது; சமுதாயத்தோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்னும் அவா உந்தியதால் பொடி வேலைகளைப் பற்றி, இங்கே சற்று விரிவாகக் குறிப்பிடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/725&oldid=787724" இலிருந்து மீள்விக்கப்பட்டது