பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. குஞ்சிதம் குருசாமி எடுத்துக்காட்டான எஸ்.கே. சாமி நானும் என் மனைவியும் தஞ்சையில் குடியிருந்தபோது, என் சகலர், தோழர் குத்துாசி குருசாமியும் அவரது வாழ்க்கைத்துணைவியார்திருமதி குஞ்சிதம் குருசாமியும் வந்தார்கள். இரண்டு நாள் தங்கினார்கள். பின்னர், கும்பகோணத்திற்கு அடுத்த சாக்கோட்டைக்குச் சென்றார்கள். என் மனைவியும் நானும் அவர்களுடன் சென்றோம். சாக்கோட்டையில் சுயமரியாதைச் சங்கத்தின் சார்பில் படிப்பகம் ஒன்று செம்மையாக நடந்து வந்தது. அதன் ஆண்டு விழாக்களும் முறையாக நடந்தன. அத்தகைய ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்று, உரையாற்றவே இருவரும் சென்னையிலிருந்து வந்தனர். அப் படிப்பகத்தை உள்ளுர்த் தோழர்கள், கண்ணினைக் காக்கும் இமை எனக் காத்து வந்தார்கள். நாங்கள் சென்ற ஆண்டு விழா, சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் பெரிதாகவே இருந்தது; அவையோர் அக்கறையோடு கேட்டார்கள். புதியன தெரிந்துகொள்வதில் அம் மக்களுக்கு இருந்த ஆர்வம், ஒட்டுவார் ஒட்டியாக இருந்தது. சாக்கோட்டை சுயமரியாதைப் படிப்பகத்தின் மூளையாக நாடிநரம்புகளாகச் செயல்பட்ட ஒருவர், நினைவுக்கு வருகிறார். அவர் பெயர் எஸ்.கே. சாமி. = அவர் என்ன பெருநிலக்கிழாரா? இல்லை. தொழில் அதிபரா? இல்லை. பட்டதாரியா? இல்லை. அவர் நிலைதான் என்ன? மாவட்ட ஆட்சிக்குழுவின் தொடக்கப் பள்ளியில் இளநிலை ஆசிரியர். அவரது பள்ளிப்படிப்போ, சாதாரணம். பல்துறை அறிவோ ஏராளம். அக்கால, தன்மான இயக்கத்தார், செய்தித்தாள்களையும் பிற மாத, வார இதழ்களையும் படிப்பதில், ஆய்வதில் முனைப்பைக் காட்டினார். அதற்குத் தோழர் எஸ்.கே. சாமி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். புரட்சிகரமான சிந்தனைக்கு உரியவராகிவிட்ட அவர்பால் பகை எழவில்லையா? எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/726&oldid=787725" இலிருந்து மீள்விக்கப்பட்டது