பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮᏮ நினைவு அலைகள் அவர் பின்பற்றிய வழி, பலருக்கு எரிச்சலை ஊட்டியது. அவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் என்று நினைப்பு. பகுத்தறிவுக் கருத்துகளை அடிக்கடி மேடையேறி வெளிப் படுத்துவார். அக்கம்பக்கத்தில் அவருடைய செல்வாக்கு வளர்ந்தது. அதனால் அழுக்காறு கொண்டவர் அநேகர். - பல அழுக்கு ஒடைகளும் இணைந்து, மாவட்ட ஆட்சிக்குழுவின் தலைவரிடம் மோதின; சாமியைச் சாக்கோட்டையை விட்டு மாற்றும்படி நெருக்கின. அன்று பொதுப் பதவிகளில் இருந்தவர்களில் பலர். "நொய்க்கஞ்சி' இயல்பு அற்றவர்கள். தஞ்சை மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர் தோழர்களைக் கலந்து நடவடிக்கை எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி கட்சிக்காரர்களைக் கலந்தாலோசித்தார். தோழர்கள் என்ன சொன்னார்கள்? ஆசிரியர் எஸ்.கே. சாமி, பணிபுரிவதில் எப்படி இருக்கிறார் என்று கண்டுபிடிக்கச் சொன்னார்கள். அந்த ஆய்வு காட்டியது என்ன? அவர் பாடங் கற்பித்தலில் புலி. பள்ளிக்கு வருவதில் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டார். பள்ளி தொடங்குவதற்கு முன்பே, பள்ளியில் இருப்பார். முடிந்த பின், வேலைகளை முடித்துவிட்டே செல்வார். தம்மோடு வேலை செய்பவர்களிடம் இனிமையாகவே பழகுவார். பள்ளியைப் பட்டிமன்றமாக்க மாட்டார். விடுமுறை நாள்களில்தான், பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்ப அங்கும் இங்கும் எஸ்.கே. சாமி செல்வார். இத்தகவல்களைக் கண்டுபிடித்த பின், கலந்து பேசினார்கள். 'பணியாளர் எவரும் தம்முடைய திறமையான பணிக்கு மட்டுமே, ஆட்சிக் குழுவிற்குப் பொறுப்பு. 'தம் சொந்தக் கருத்துகளுக்கு எந்த நிர்வாகிக்கும் விளக்கம் சொல்லத் தேவையில்லை. 'எஸ்.கே. சாமி, சுயமரியாதைக்காரராக இருப்பது, அவரது உரிமை. 'தமது தீவிர கருத்துகளைக் காரணங்காட்டி, ஆசிரியப் பணிக்கு ஊறு செய்யாத வரையில் சாமியின்மேல் நடவடிக்கை எடுப்பது சரியல்ல. 'அப்படிப்பட்ட திறமையாளரைச் சுறுசுறுப்பாளரை, ஒரே இடத்தில் விட்டுவைப்பது விவேகம். அவரைப் பல ஊர்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/727&oldid=787726" இலிருந்து மீள்விக்கப்பட்டது