பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 637 மாற்றி, பல ஊர்களையும் கெடுக்கவிடக்கூடாது' என்று முடிவு செய்யப்பட்டது. குருசாமி உரை ஆண்டு விழாவில், சா. குருசாமியின் உரை, வழககம்போல ஒளிவிட்டது. 'அய்யருக்கு, திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மேல் பக்தி ஏற்பட்டால், அவர் நடுத்தெருவில் உருண்டபடியே கத்துவதில்லை. நம்மவருக்குப் பக்தி ஏற்பட்டால், உடல் தேய உருளுவார்! "சாதகப் பொருத்தம் பார்த்து, நல்ல நாளைத் தேடிப் பிடித்து, பரம்பரைப் புரோகிதர் மந்திரம் சொல்ல, திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனையோ பேர்கள் விதவைகளாகியுள்ளார்கள். இவற்றைப் பொருட்படுத்தாமல் ராகு காலத்தில் திருமணம் செய்து கொண்ட சீர்திருத்தக்காரர்களில் அத்தனைபேர் விதவைகளாக வில்லையே! அது ஏன்? இப்படிக்கேட்டு, குருசாமி அவையோர் சிந்தனைக்கு உரமூட்டினார். திருமதி குஞ்சிதத்தின் உரையில் இடிமுழக்கம் இல்லாவிடினும் உறுதி இருந்தது. அவையச்சம் இன்றி, சொற்களுக்குத் தடுமாறாமல், அவர் ஆற்றிய உரையைக் கேட்க, ஏராளமான பெண்கள் குழுமி இருந்தனர். 'ஆண்களைப் போன்றே பெண்களும் எல்லா உணர்வுகளும் உள்ள உயிர். எனவே, ஒரே வகையான மதிப்பை இரு பாலாருக்கும் வழங்குங்கள். பெண்களையும் ஆண்கள் அளவு படிக்கவையுங்கள். பெண்கள் நகைப் பித்திலிருந்து விடுபட உதவுங்கள்' என்றார். அப்போது தோழர்குருசாமி, கடலூரில் உதவிப்பஞ்சாயத்துஅலுவலராக இருந்தார். அவ்வமயம் திருமதி குஞ்சிதம் அங்குள்ள கிறுத்துவப்பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிந்தார். புகழ்பெற்ற ஆசிரியையாக விளங்கினார். அவர்கள் இருவருக்கும் புதுவையில் வாழ்ந்த பாரதிதாசன் நண்பரானார். அடிக்கடி மூவரும் கூடி உரையாடுவர். கவிதை பிறந்த கதை பாரதிதாசன் கவிதைகளில் வரும் பெண் குழந்தைக்குத் தாலாட்டு எப்படிப் பிறந்தது? அவர்கள் மகள், ரஷியா குழந்தையாக இருந்தபோது, பகுத்தறிவுக்கு ஒத்த தாலாட்டைப் பாடித் தருமாறு பாரதிதாசனைக் கேட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/728&oldid=787727" இலிருந்து மீள்விக்கப்பட்டது