பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து- சுந்தரவடிவேலு 31 ஒவ்வொருவரையும் பார்த்து, யார் பயிரில் என்ன சிறப்பு, என்ன குறை, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும், என்பனவற்றை அவர்களுக்கு விவரமாக எடுத்துச் சொல்லுவார். ஊர் முழுவதும் பசுமையாக இருக்க வேண்டுமென்பது அவர் ஆவல். ஒரு நூற்றாண்டுக்கு முந்திப் பிறந்துவிட்ட தவறை, அவர் உணரவில்லை. எனவே, சில வேளை நிலத்துக்கு உடையவர்கள், அலட்சிய மாகவோ, அகந்தையோடோ பதில் சொன்னாலும் அதைப் பொருட் படுத்தாமல், 'என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் நன்னெறியைப் பின்பற்றுவார். யாருடைய பாராட்டையும் நன்றியையும் எதிர்பார்க்க மாட்டார். எவருடைய ஏளனத்தையும் சிறிதும் பொருட்படுத்தமாட்டார். என் பாட்டனார் சண்முகம் வயல்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குளிப்பதற்காக ஆற்றுக்குப் போவார். குளித்துவிட்டுத் திரும்புகையில் பெருமாள் கோயிலில் கும்பிட்டுவிட்டு, வீடு திரும்புவார். ஆற்றுக்குப் போகும் வழி நான் படித்த திண்ணைப் பள்ளிக்கூடத்தை அடுத்து இருந்தது. அவர் குளிக்கப் போகும்போது நான் பள்ளியை விட்டு, அவர் பின்னால் ஒடிப்போய்க் கற்கண்டு அல்லது வெல்லம் வாங்க, அவரிடம் அரையனா கேட்பது வழக்கம். செல்லப் பேரனாகிய எனக்குக் காசு கொடுக்க மறுக்க மாட்டார். அவர் கொடுக்கும் அரையனாவைக் கொண்டு பக்கத்து மளிகைக் கடையில் வெல்லமோ பனங்கற்கண்டோ வாங்குவேன். இதைப் பள்ளிக்குக் கொண்டு போவேன். நாலு பேரும் தின்போம். ஒருநாள், தாத்தா குளிக்கப் போவதைக் கண்ட நான், குதித்தோடினேன். பணம் கேட்டு நச்சரித்தேன். காசு கையில் இல்லையோ என்னவோ? என்னை விரட்டி விட்டார். திரும்பி வந்து, ஆசிரியர்மேல் பாய்ந்தார். 'பையனைப் படிக்க விட்டால் அவனை என் பின்னால் ஒடவிட்டுவிட்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அடக்க முடியவில்லையானால் பாடஞ் சொல்ல வேண்டாம். வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுகிறோம் என்று முழங்கினார். ஆசிரியர் என்ன செய்வார் வாய் திறக்கவில்லை. தாத்தா அப்படி நகர்ந்ததும் ஆசிரியர், என்னை அடிக்கப் பிரம்பை இங்கினார். அதுவரையில் நான் யாரிடமும் அடிபட்டதில்லை. செல்லப் பிள்ளை அடிபட ஒப்புமா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/73&oldid=787729" இலிருந்து மீள்விக்கப்பட்டது