பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு Ꮾ89 திருமணத்தின்போது பெரியார் வற்புறுத்தலின் பேரில், குஞ்சிதத்திற்குத் தாலி கட்டினார் குருசாமியார். பெண்களுக்குத் தாலி கட்டுவது, ஆண்கள் ஆதிக்கத்தின் சான்று: பெண்கள் அடிமைப்பட இசைவதற்கு அடையாளம். இது பெரியாரின் கருத்து. இக்கருத்தினைக் குருசாமியார் உணர்ச்சி பொங்க, பொது மேடைகளில் எடுத்து உரைப்பதைக் குஞ்சிதம் சிலமுறை கேட்டார்; மனமாற்றம் கொண்டார். குருசாமியின் ஒப்புதல் பெற்று, தாலியைக் கழற்றி வைத்துவிட்டார். 'பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சமய மரபு என்பது பெரியார் கட்சி. அதையும் குத்துாசி குருசாமி வன்மையுடன் கண்டித்து வந்தார். அவர் மனைவி, சமய அடையாளத்தை அணிவது, அவருக்குப் பழியுண்டாக்கும் என்று அம்மையார் நினைத்தார். எனவே, குங்குமம் அணிவதைக் கைவிட்டார். இவ்விரு மாற்றங்களுக்காக எவரையும் துன்புறுத்தாத, புதிய தன் கொள்கை முறைக்காக அம்மையார் கொடுத்த விலையோ, அம்மா பெரிது! குஞ்சிதம் வேலை இழந்தார் பாதி நாள் வெளியூர்களில் பட்டினி கிடக்க வேண்டிய வேலை அக்கால உதவிப் பஞ்சாயத்து அலுவலர் வேலையாகும். கடலூரில், அப்பணி புரிந்து வந்த குருசாமிக்கு டைபாயிட்' காய்ச்சல் கண்டது; உயிருக்கு உலையாகுமோ என்னும் அளவிற்கு நோய் முற்றிற்று. அவர் குணம் அடைந்ததும், அந்த வேலையை உதறிவிட்டார்: பழையபடி சென்னையில், ஊராட்சி மன்றங்களின் தலைமைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை பார்க்க வந்தார். திருமதி குஞ்சிதம் அம்மையாரும் கடலூர் பணியை விட்டு விட்டு, சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னை, மயிலாப்பூரில் இப்போது சர். சிவசாமி அய்யர் பெண்கள் மேனிலைப் பள்ளியாக நடப்பது, அப்போது 'தேசிய உயர்நிலைப் பள்ளி' என்ற பெயரில் நடந்துவந்தது. அப்பள்ளியில் வரலாற்று ஆசிரியையாக, திருமதி குஞ்சிதத்திற்கு இடம் கிடைத்தது. மாணவிகள், பெற்றோர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியைகள் முதலியோரின் நன்மதிப்பைப் பெற்றார்; நிறைவோடு பணி ஆற்றிக் கொண்ாாங்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/730&oldid=787730" இலிருந்து மீள்விக்கப்பட்டது