பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 693 --- 'பசித்தோர் முகம் பார் என்று அடையாளங்கண்டு கொள்ள முடியாது அல்லல்படுகிறார். அவரும் மனிதர்தானே! முகத்தில் உள்ள கண்கள் புண்களாகத் தோன்றுகின்றன; நெஞ்சுக்குள் அழுகிறார். ஒருவரா அப்படி அழுகிறார்? அநேகமாக வீட்டிற்கு வீடு அப்படி அழுவோர் உண்டு; நெடுங்காலமாக உண்டு. இந்திய மக்களில் மிகப் பெரும்பாலோர் நிலை, இத்தகைய இழிநிலையே. காந்தி அடிகள் வெள்ளையன் வருவதற்கு முன்பு அதே இழிவு. துரைமார் வந்த பிறகும் அதே சீழ். அதே கேவல நிலை. பிறிதினோயைத் தன்னோய் போல் நோக்கிய கருணை உள்ளம் இந்தியாவில் தோன்றியது. அண்ணல் காந்தியடிகளாக மலர்ந்தது. இந்தியர்களின் வறுமையைக் கண்டு இளகிய அப்பேருள்ளம், இனவெறியைக் கண்டு பொங்கிய அந்த சமத்துவ உள்ளம் - பனம், பொருள், பொன், புகழ், பதவி என்று வெறிபிடித்து அலையும் மக்கள் இடையே - இப்பற்றுகள் ஏதும் அற்றுப் பாடுபட்ட தூய உள்ளம், நம்மவரின் தற்குறித் தன்மைபற்றியும் நினைந்து நினைந்து, உருகி உருகி வேண்டிற்று. அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவியுள்ள எழுத்தறியாமை பற்றி மகாத்மாகாந்தி அவர்களின் கூற்றினை நினைவுகொள்வோம். 'நம்மோடு பிறந்து, நம்மோடு இருந்து, நம்மோடு துன்பப்பட்டுக் கிடக்கும் உடன்பிறப்புகளில் நூற்றுக்கு எண்பது ஆண்களும் பெண்களும் எழுத்தறிவின்றித்தற்குறிகளாக இருப்பது, இந்தியாவிற்கு இழிவு படித்த இந்தியர்களுக்குப் பாவம் ஆகும் என்றார். படித்த ஒவ்வொருவரும் படிக்காத ஒருவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுங்கள் என்றார். அதோடு நின்றாரா? இல்லை. நம் நாட்டின் மறுமலர்ச்சிக்காக - நல்வாழ்விற்காக - அளித்த பதினான்கு ஆக்கத்திட்டங்களில் ஒன்றாக, முதியோர் எழுத்தறிவிப்பைச் சேர்த்தார். அவ்வப்போது நினைவு படுத்தினார். அண்ணல் அடுத்த படியேறினார் சொல்லிய வண்ணம் செய்து காட்டினார். காந்தியார், தம் வாழ்க்கைத் துணைவியாம், அன்னை கஸ்தூரிபாய்க்குத் தாமே எழுத்தறிவு கற்றுத் தந்தார்; மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/734&oldid=787734" இலிருந்து மீள்விக்கப்பட்டது