பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 695 சட்டென்று நூற்றுக்கணக்கான எழுத்தறிவு நிலையங்கள் எழுந்தன; முதியோர் கல்லூரிகள் முளைத்தன. ஆனால், அனைத்தும் மறைந்தன; முன் பின்னாக மறைந்தன. 'எண்ணெய்ச் செலவே ஒழிய, பிள்ளை பிழைத்த பாடு இல்லை. இது நாட்டில் வழங்கும் வழக்கு. அதற்கேற்ப அன்று அரசின் பணம் அரசு ஊழியருக்குச் செலவாயிற்றே ஒழிய, மக்கள் எழுத்தறிவும் பெறவில்லை; தொடர் அறிவும் பெறவில்லை. முதல் வெள்ளோட்டம் தோற்றதால், நீடித்த தீமை நுழைந்தது. நம் உணர்வில் அவநம்பிக்கை, ஆற்றாமை, ஒன்றும் செய்ய முடியாது என்னும் சொத்தைகள் வந்துவிட்டன. ஒமந்துாரார், அவினாசியார் தொடங்கியவை தவறானவையா? இல்லை. தேவையற்றவையா? இல்லை. ஆனால், ஏன் பட்டுப் போயின? அணுவளவு வேலையானாலும் மலை அளவு தொழிலானாலும் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, சில முன்னேற்பாடுகள் தேவை. அம்முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளாமல், வேலையைத் தொடங்குவது தோல்வியில்தான் முடியும். தோல்வி ஏன்? சமைக்க வேண்டுமா? அடுப்பைத் தேட வேண்டும். அதில் போட்டு எரிக்கும் பொருளைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். போதுமா? m உலையில் வைக்கும் சமையற் பானையைத் தேடிக் கழுவிக் கொண்டு வர வேண்டும். அடுப்பை மூட்டி, பானையை அதன்மேல் வைத்து அரிசியை அள்ளிப்போட்டால் சோறு கிடைக்குமா? கிடைக்காது. அடுப்பில் உலைவைக்க வேண்டும்; நன்னிரை ஊற்றிக் காயவைக்க வேண்டும்; போதிய அளவு சூடேறிய வெந்நீரில், அரிசியைப் போட்டு, வேகும் வரைதுழாவ வேண்டும். அடுத்து அடுத்து எரியும் நெருப்பைத் து.ாண்டி விடவும் வேண்டும். அப்படிச் செய்தால் உண்ணும் சோறு கிடைக்கும். வராத விருந்தாளி வந்துவிட்டார்; பெரிய விருந்தாளி வந்து விட்டார்; அவருக்கு விரைவில் உணவளிக்க வேண்டுமென்ற துடிப்பில், மேற்கூறியவற்றைச் செய்யத் தவறினால், விருந்து அளிக்கச் சோறு கிடைக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/736&oldid=787736" இலிருந்து மீள்விக்கப்பட்டது