பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 நினைவு அலைகள் சரியான, தேவையான, முதியோர் எழுத்தறிவு, முதியோர் தொடர் கல்வி போன்ற முன்னோடி முயற்சிகள் வீணாகிப் போனது எதனால்? ஆத்திரங்காரணமாகப் போதிய ஆயத்தம் செய்யத் தவறியதால்: அக்காலகட்டத்தில் மடை திறந்துவிட்ட கல்வி மாற்றங்களும், புதிய கல்வி வளர்ப்பு முயற்சிகளும் இன்றியமையாதவை. கல்வியினைச் சரியான வழியில் திருப்புவன. அவற்றில் ஒன்றுகூட தவறானது அல்ல. வீணானது அல்ல. இருப்பினும் அத்தனையும் படுதோல்வி அடைந்தன. முன்னேற் பாடுகளைப் போதிய அளவு செய்யத் தவறிவிட்டதால், அத்தகைய நிலைக்குள் வீழ்ந்தோம். இந்தியப் பெரியோர்களிடம் இரண்டறக் கலந்திருக்கிற, மற்றோர் தீய இயல்பும் உயிரூட்டமான அம்முயற்சிகள் மறைந்து போனதற்குக் காரணம் ஆகும். அது என்ன? இந்தியாவில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முன்னர் ஆட்சியில், நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த வேலைகளை அழிப்பது, மாற்றுவது, பின்னால் தள்ளிவிட்டுப் புதிய வெளிச்சங்காட்டிகளை உருவாக்குவது ஒன்றே பின்னர் வருவோருடைய பெரும்பனியாக இருப்பதை, தன்னாட்சி இந்தியாவின் வரலாறும் மெய்ப்பிக்கிறது. அதே கட்சி ஆட்சி தொடர்ந்தாலும் முன்னர் இருந்த அமைச்சர், தொடங்கியதைத் துரக்கியெறியாவிட்டால், தன் முத்திரை பதியாது என்னும் வெம்பிய சிந்தனைகளே நாட்டைக் கெடுக்கின்றன. இப்போக்கும் தேவையான நன்முயற்சிகளைக் கல்லி எறிந்தது. எனவே நாடு தழுவிய தற்குறித்தன்மையைச் சிதைக்கத்தக்க முயற்சிகள் தேவை என, இன்றைக்கும் சொல்ல வேண்டிய நிலையில் தத்தளிக்கிறோம். இழிவு நீங்க எழுத்தறிவு தேவை எழுத்தறிவு பெறுதல், இழிவு நீக்க முயற்சிகளின் ஒரு கூறு: வளர்ச்சியின் வேர், வையத்துள் வாழ்வாங்கு வாழக்கற்றுத்தரும் கருவி. இதை உணர்ந்த சோவியத் ஆட்சி, பிற வளங்களை உருவாக்கு வதற்கு முன்பே, உள்நாட்டுப்போர் மும்முரமாக நடக்கையிலேயே, பதினான்கு வெளிநாடுகள், சோவியத் மண்ணில் போராடிக் கொண்டு இருக்கும்போதே, நாடு தழுவிய முதியோர் எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கி, முடுக்கிவிட்டது; தொடர்ந்து விடாமுயற்சியுடன் முனைப்பாகச் செயல்படுத்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/737&oldid=787737" இலிருந்து மீள்விக்கப்பட்டது