பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 நினைவு அலைகள் அவ்விரண்டில் எதைப் பரிந்துரைப்பாய் என்று கிருபால் கேட்டார். அதைத் தமிழக அரசின் முடிவுக்கு விடுவது நல்லது என்றேன். அதையும் தட்டாமல் ஏற்றுக் கொண்டார். 'தமிழ்நாட்டை உழவர் எழுத்து அறிவு இயக்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கு இசையவேண்டுகிறோம். "அதோடு எந்த மாவட்டத்தில் அதைச் செயல்படுத்தலாம் என்பதை மாநில அரசே முடிவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறோம். 'உழவர் எழுத்தறிவு திட்டத்திற்கு ஆகும் முழுச் செலவையும் அய்ந்தாண்டு காலத்திற்கு, இந்திய அரசே ஏற்றுக் கொள்ளும்' இப்படியொரு கடிதத்தைத் தமிழக அரசுக்கு அனுப்பினோம். சென்னை மாகாண நிர்வாகம் திறமைக்குப் பெயர் பெற்றது. அதே போன்று திட்டங்களை, கோப்புகளை அழுத்தி வைப்பதற்கும் நெடுங்காலமாகப் புகழ்பெற்றது. அதை மெய்ப்பிக்கும் கோர அழுத்தங்களை, பின்னர் தக்க இடங்களில் விவரமாகக் குறிப்பிடுவேன். 'உழவர் எழுத்தறிவு திட்டம் பற்றி இந்திய அரசு எழுதிய கடிதத்திற்குச் சென்னையிலிருந்து பல மாதங்களாகப் பதில் இல்லை; நினைவுக் கடிதங்களும் தூக்கத்தைக் கலைக்கவில்லை. அண்ணாவின் அழைப்பு அந்நிலையில்தான் முதல் அமைச்சர் அண்ணாதுரை தில்லிக்கு வந்தார். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளியாயின. உடனே, திரு. பிரேம்கிருபாலிடம் சென்றேன். முதல் அமைச்சரைக் கண்டு அந்தத் திட்ட்ம் பற்றி, இசைவுபெற உரிமை கொடுக்கும்படி வேண்டினேன். அவர் மகிழ்ச்சியோடு அளித்தார். முதல் அமைச்சர் அண்ணாதுரை அவர்களைத் தில்லி, தமிழக இல்லத்தில் கண்டேன். தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழெட்டுப் பேர்கள் இருக்கும்போதே, என்னோடு பேசினார். எதற்காக வந்தேன், என்பதை நான் கூறியதும், தமது செயலாளர் திரு. சொக்கலிங்கத்தைக் கூப்பிட்டார். 'நாளை நாம் ஊர் திரும்பியதும், உழவர் எழுத்தறிவு' திட்டத்திற்கான ஒப்புதலை, தந்தி மூலம் தில்லிக்குத் தெரிவிக்க வேண்டும். நான் சொன்னேன் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். தயக்கம் வேண்டாம்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/741&oldid=787742" இலிருந்து மீள்விக்கப்பட்டது