பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 701 என் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. மகிழ்ச்சி வெள்ளம் ஆளை அடித்துக்கொண்டு போகுமென்பது தெரியவில்லை. அடுத்த நொடி நான் எதிர்பாராத பெரியதொரு திருப்பம் ஏற்பட்டது. முதல் அமைச்சர் அண்ணாதுரை என்னைப் பார்த்து, 'நீங்கள் கேட்பதற்கு நான் இசைகிறேன். நான் கேட்பதற்கு நீங்கள் தடை சொல்லாமல் இசையுங்கள். 'நீங்களே, சென்னை மாநிலத்திற்குத் திரும்பி வந்து உழவர் எழுத்தறிவுத் திட்டத்தைச் செயல்படுத்துங்கள். "இந்திய அரசின் திட்டமோ, ஒரு மாவட்டத்தில் வெள்ளோட்டம் பார்க்கும் சுருக்கமான நடவடிக்கை. 'நான் நினைத்துக் கொண்டிருப்பது பெரிய திட்டம், அதை நிறைவேற்றி வைக்க நீங்கள் சென்னைக்கு வாருங்கள். 'எனக்கு, என் கட்சிக்கு வாக்களித்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர்கள் தற்குறிகள்; அவர்கள் அனைவரும் நம்மவர்கள் கைநாட்டுகள் என்கிற இழிவை நாமே குத்தகை எடுத்துக் கொண்டுள்ளோம். 'என் கட்சிக்கு வாக்களித்த அவர்களை மறுபடியும் கண்டு வாக்களிக்கும்படி கோருவதற்குமுன், அவர்கள் அனைவருக்கும் எழுத்தறிவாவது கொடுத்து விடவேண்டும். * 'அப்போதுதான் நான் அவர்களிடம் உங்கள் பிள்ளைக ளுக்குக் காமராசர் கொடுத்த கல்வி வாய்ப்பை அப்படியே காப்பாற்றி இருப்பதோடு, உங்களுக்கும் எழுத்தறிவு கொடுத்து விட்டேன் என்று உற்சாகத்தோடும் உரிமையோடும் பேசலாம். 'பொதுமக்கள் நீங்கள் சொன்னால் கேட்பார்கள். தமிழ்நாட்டில் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வந்துவிடுங்கள்' என்று அழைத்தார். மாட்டேனென்பேனா? இந்திய அரசின் அய்ந்து அழைப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு ஆறாம் முறை, அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர்சாக்ளாவே நேரில் அழைத்ததால், தாட்சண்யப்பட்டு அங்குச் சென்றேன். அவர் சில திங்களில் அயல்துறை அமைச்சராகிவிட்டார். அவர் இல்லாதபோது எனக்கு அப்பணியில் பற்று அற்று விட்டது. அறிஞர் அண்ணா, எவரை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்தவர். என்னைக் கல்வித் தொண்டிற்கே பயன்படுத்துவார் என்பது தெரியும். எனவே, முதல் அமைச்சரின் அழைப்பை நொடியில் ஏற்றேன். 'அய்யா தங்கள் அரசு, என்னைத் திருப்பி அனுப்பும்படி எழுதப்போகிறதா? அல்லது நானே என் பழைய பதவிக்குத் திரும்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/742&oldid=787743" இலிருந்து மீள்விக்கப்பட்டது