பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 நினைவு அலைகள் மாவட்டக் கல்வி அலுவலராக விரும்பினேன் எனவே, இளந்துணை ஆய்வாளனாக இருக்கும் நிலையிலிருந்து, மாவட்டக் கல்வி அலுவலராக அவாவினேன். அப்படியொரு நிலை வந்தால், பெரிதும் பயன்படுவே னென்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு உரமிடுவதுபோல், உடையவர் சாத்துமுறையைக் கான' திருப்பெரும்பூதூர் வந்த திருவாளர் சங்கரலிங்க தாசு அவர்கள் எனக்கு ஆரூடம் சொல்லிவிட்டுப் போனார். அந்த நல்லவர் வழிகாட்டியபடி, பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு வேண்டிய தேர்வுகளில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேர்ச்சி பெற்றேன். அடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மேல்நிலைத் தேர்வுகளுக்கு ஆயத்தமானேன்; பாடு பட்டுக் கற்றேன்; ஒன்றன்பின் ஒன்றாகத் தேர்வுகள் எழுதினேன்; அவற்றில் வெற்றி பெற்றேன். அலுவல் பணியின் பளு, தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்யும் நெருக்கடி ஆகியவை, என் தனிமைத் துன்பத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தன. அத்துன்பம் நெடுநாள் தொடர்ந்ததா? இல்லை. சில திங்களில் எப்படி? கூட்டுக்குடும்பம் ஒவ்வொருவர் குருதியிலும் ஒவ்வோர் இயல்பு உண்டு. யாரிடமும் அழுத்திக்கேட்கத் தெரியாத போக்கு, எங்கள் குடும்பத்திற்கு வழி வழி வந்தது. என் மாணவர் பருவத்தில்கூட, என் பெற்றோரிடம் இது வேண்டும்; அது வேண்டும்' என்று இரண்டு முறை கேட்கவோ, அடம்பிடிக்கவோ நேர்ந்தது இல்லை. எதனால்? சாலப்பரிவோடு, என் தாய், என் தேவைகளை முன்கூட்டியே நிறைவேற்றினார். இன்ன சிற்றுண்டி தேவை என்றால் போதும்; எப்படியோ செய்து கொடுத்துவிடுவார். பணத் தேவைகளை, அப்பாவிடமே ஒரே முறை சொல்வேன். பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி திறக்கும் நாளை, குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு நினைவுபடுத்துவேன். அவ்வமயம். எவ்வளவு பணத்தோடு செல்லவேண்டும் என்னும் கணக்கை, அப்பா கேட்டுத் தெரிந்துகொள்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/745&oldid=787746" இலிருந்து மீள்விக்கப்பட்டது