பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 707 பரிந்துரை பலித்தது. தஞ்சையில் இருந்து என்னைத் தலைநகரான சென்னைக்கு மாற்றும் ஆனை வந்தது. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் திரு. என்.ஆர். சாமியப்பா விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றை இங்கே குறிப்பது பொருத்தம். 'தம் சாதி உயர்வு என்ற உணர்விலே ஒன்றிய அய்யர்களாகக் கருதப்படும் மரபிலே வந்தவர், சாமியப்பா. ஆனால் அத்தகைய ஆணவத்தில் இருந்து அடியோடு விடுபட்டவர். எல்லாச் சாதியினரோடும் நெருங்கிப் பழகக்கூடியவர். அவரால் பல சாதி இளைஞர்கள் பதவிபெற்றார்கள்; பல இடங்களில் பணிபுரிந்து வந்தார்கள். அவ்வூர்ப் பொது நிகழ்ச்சிகளுக்காகச் சாமியப்பா அங்குச் செல்லும்போது, அவர்கள் கூட்டத்திற்கு வந்து, அவரைக் காண்பது வழக்கம். அவ்வேளைகளில், சாமியப்பா நடந்துகொண்ட முறை நம் சமுதாயத்திற்குப் புதிது. வியப்பிற்கு உரியது. சாமியப்பா, அநேகமாக, ஒவ்வொருவர் தோளிலும் கை போட்டுப் பேசுவார். அதோடு ஒவ்வொருவரோடும் தனியே ஒரு மணித்துளியாவது குசுகுசு என்று ஏதோ இரகசியம் பேசுவார். சாமான்ய நிலையில் இருப்பவர்களுக்கு அத்தகைய தனிமைப்பேச்சு 'அமிழ்தமாக வேலை செய்யும்; பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படும். 108. சென்னைக்கு மாற்றல் உமாமகேசுவரம்பிள்ளை மறைவு நான் தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாற்றுதல் ஆகிவருமுன், அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சி யொன்று ஏற்பட்டது. மனிதன் சமுதாயத்தில் வாழ்பவன் அல்லவா? சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்ச்சிகளால் மனிதன் பாதிக்கப்படுவது இயற்கை. நான் தஞ்சையில் தங்கியிருந்தபோது, என் அமைதியைக் குலைத்த பேரிழப்பு ஒன்று ஏற்பட்டது. அது என்ன? ஒரு பெரியவரின் மறைவு. அவர் பெயர் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/748&oldid=787749" இலிருந்து மீள்விக்கப்பட்டது