பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 33 _= 'இனியாவது அடங்கிநட. இல்லாவிட்டால் அப்புறம் பாடஞ் சொல்ல அக்கம் பக்கத்தில் எவரும் கிடைக்கமாட்டார். பிறகு ஊரிலேயே, குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்' என்று இடித்து அனுப்பினார் என் தந்தை. தந்தை என்னைக் கடிந்து கொண்டது, அதுவே முதன்முறை. 'திரும்பத் திரும்ப அடித்தால், குதிரையும் கழுதையாகிவிடும்' என்பது நாட்டு வழக்கு. அந்த உண்மையை உணர்ந்ததால் போலும், என்னை ஏழு வயது வரையில் கடிந்து கொள்ளாமலேயே வளர்த்தார். நல்ல மாட்டுக்கு ஒர் அடி நல்ல மனிதனுக்கு ஒரு சொல்! தந்தை முதன்முறை இடித்துரைத்த பிறகு, குறிப்பிடத்தக்க தவறு ஒன்றையும் நான் செய்யவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடந்தது. காஞ்சி யாத்திரை சில திங்கள் சென்றன. 'மாமா சுந்தரசேகரரோடு, வடிவேலுவும் காஞ்சிபுரம் சென்று படிக்கட்டும். இது பாட்டி, அம்மா, அப்பா ஆகிய மூவரும் செய்த முடிவு. ஏற்கெனவே என் மாமா, காஞ்சியில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சியில் பள்ளிக்கூடங்கள்தொடங்கும் பருவம் வந்தது. ஒரு நாள் விடியற்காலை, நான்கு மணிக்கு இரட்டை மாட்டு வண்டியில் புறப்பட்டோம்.துக்க மயக்கத்தில் நான் வண்டியேறினேன். என்னுடன் என் தந்தை, மாமா, சித்தி ஆகிய மூவரும் வந்தனர். மூன்று ஆறுகளையும், ஒரு மடுவையும் கடந்து நாட்டுப் பாதையில் சேற்றிலும் சகதியிலும் சென்று காஞ்சிபுரத்தை நாங்கள் அடைந்தோம். அப்போது காலை மணி எட்டு. அந்தக் காலப் பயணம் எவ்வளவு தொல்லையானது என்பதை இதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம். காஞ்சிபுரத்தில் என் மாமா, ஒரு பெரிய வீட்டின் பின்பகுதியில் இரண்டு அறைகள் வாடகைக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார். சாதியின் கவுரவம் விட்டுக்குரியவர் வைத்தியர் வேலு முதலியார். அவர் குடும்பத் தோடு முன்பாதி விட்டில் குடியிருந்தார். பின் பாதியில் ஒரு பாதி எங்களுக்கு. மற்றொரு குடும்பமும் பின் கட்டில் குடியிருந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/75&oldid=787751" இலிருந்து மீள்விக்கப்பட்டது