பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.4 நினைவு அலைகள் ஆங்கிலேயர் மேல் கொண்டிருந்த ஆத்திரத்தில் அப்படியாவது நடந்து தொலையட்டும் என்று எண்ணிய இந்தியர்களும் இருந்தார்கள். கிழக்கே, டோஜோவின் தலைமையில் இயங்கிய ஜப்பானியர் மஞ்சூரியாவைப் படையெடுத்துப் பிடித்தார்கள். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா போன்ற நாடுகளைப் பிடித்து முன்னேறி இந்திய மண்ணையும் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம் தலைகாட்டிற்று. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களில், விமானத் தாக்குதல் பாதுகாப்பு முறை மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே, நிலத்தடியில் பதுங்கும் கூடங்கள் கட்டப்பட்டன. பொதுமக்கள், எப்போது அவற்றிற்குள் பதுங்கிக் கொள்ள வேண்டும். எப்படிப் பதுங்கி இருக்கவேண்டும்; எந்த அடையாளம் கிடைத்தால், அங்கிருந்து வெளியே வரலாம். இத்தகைய தகவல்களைப் பள்ளிச் சிறுவர்கள் உட்படப் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் அவற்றிற்கான பயிற்சிகளைக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 109. பேச்சாளனானேன் பாதுகாப்பு அணி விமானத் தாக்குதலின்போது, பொதுமக்களைப் பாதுகாக்கும் முறைகளில் பயிற்சி அளிக்கும் பொருட்டு, ஒரு தனி அணி உருவாக்கப்பட்டது. அதில் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் வெவ்வேறு முழுநேர அலுவல்களில் இருந்தவர்கள். இளமையோடு இருந்த அரசு ஊழியர்கள், அதில் சேரவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நானும் நடந்து கொண்டேன். தஞ்சையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த நான் மீண்டும் மாமனார் திரு. சுப்பிரமணியம் குடும்பத்தில் ஒருவனாகி விட்டேன். குத்துசி குருசாமியாரின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்தேன். அவர்கள் வீடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்தது; முந்நூற்று நான்காம் எண்; வசதியான வீடு. அவ்வீட்டில் குடியிருந்த குத்துசியாரும் நானும் விமானத் தாக்குதல் பாதுகாப்பு அணியில் சேர்ந்தோம். அதை எங்கள் சமுதாயக் கடமையாக முழு மனத்துடன் கருதினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/755&oldid=787757" இலிருந்து மீள்விக்கப்பட்டது