பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 717 அவ்வெற்றிக்குப் பொதுமக்கள் எவ்வெவ் வகையில் உதவலாம் என்று எடுத்து உரைக்கப்பட்டது. நுகர் பொருள்களை எவரும் அளவிற்குமேல் சேர்த்து வைக்கக்கூடாது; வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைத்தல் ஆகாது: மக்கள் பீதி கொள்ளக்கூடாது என்பவைகளும் அறிவுறுத்தப்பட்டன. சிற் சில பேச்சாளர்கள் மாறுபட்ட கருத்துடைய உள்ளுர் அரசியல்வாதிகளைத் தாக்கி நீட்டும் நிலைக்குத் தாழ்ந்து போனார்கள். என்றாலும், மொத்தத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில், சென்னை மாநில போர் ஆதரவுப் பேச்சுகள் இருந்தன என்று சொல்லலாம். சென்னை மாநகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திருவாளர்கள் ஆல்பர்ட் ஜேசுதாசன், பாசுதேவ், என்.சங்கரன் ஆகியோர் பேச்சாளர்களில் முன்னணியில் இருந்தார்கள். அவர்கள் சென்னையில் புகழ் பெற்றவர்கள். குத்துசி குருசாமியும் அவரது துணைவியார் குஞ்சிதமும் அடிக்கடி கூட்டங்களில் பேசுவார்கள். அவர்களோடு, மாநகராட்சி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. கே. கல்யாணசுந்தரம் என்பவர் அடிக்கடி செல்வார்; மேடைகளில் பேசுவார். அவர் இருந்த ஆசிரிய மையக்கூட்டத்தில் நான் ஒரு முறை பேசினேன். அவ்வுரை அவரை ஈர்த்ததாம். எனவே, என்னை, போராதரவுப் பொதுக்கூட்டங்களுக்கு அழைக்கலாம் என்று, அவர், மேற்படி பெரியவர்களிடம் பரிந்துரை செய்தாராம். அவர்கள் உடனே செயல்பட்டார்கள். பொதுமேடையிலும் பேசினேன் ஒரு நாள் மாலை ஜேசுதாஸ் என்னைத் தேடி வந்தார்: பொதுமேடைப் பேச்சுகளில் கலந்துகொள்ள அழைத்தார். நான் உடனே ஒப்புக் கொண்டேன். எதனால்? அரசு ஊழியனின் கடமைகளில் ஒன்று, போராதரவு முயற்சி என்பதால் அல்ல. போராதரவு என் நம்பிக்கைக்கு ஒட்டியதாக இருந்தது. 'கெட்டபோரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காட்டிய வழி, எனக்கு மிகவும் பிடித்தமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/758&oldid=787760" இலிருந்து மீள்விக்கப்பட்டது