பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தி ைாைவு அலைகள் மூன்று குடும்பங்களும் சுத்தமான சைவக் குடும்பங்கள். அன்னிய பதார்த்தம் - அதாவது முட்டை, மீன், கறி சாப்பிடா தவர்களா என்று விசாரித்துத் தெரிந்துகொண்டே வீட்டில் குடியிருக்க வாடகைக்கு விடுவார்கள். இதிலே ஒரு வேடிக்கை. என் உறவினர்கள் அனைவரும் மரக்கறி உணவினர். எங்களுக்கு வீடு கொடுத்த வேலு முதலியாரும் அவரது சுற்றத்தாரும் அதே தாவர உணவுப் பழக்கத்தை உடையவர்கள். அருகில் குடியிருந்த மற்றொரு குடும்பமும் அன்னிய பதார்த்தத்தை அண்டர்தவர்கள். மூவருக்கும் ஆண்களுக்கு மட்டுமே ஒட்டியுள்ள சாதிப்பட்டம் 'முதலியார் என்பதாகும். இருப்பினும் நாட்டு மரபுப்படி மூவரும் மூன்று பிரிவினர்கள். நாங்கள் மாகறல், ஆற்பாக்கம் வகையறா வேலு முதலியார் கவாந்தண்டலம் வகையறா. மற்றவர் கடம்பத்துர் வகையறா. இம்மூவரும் உண்ணல், உறவு கொள்ளுதல் ஆகிய இரண்டிலும் தனித் தனியே இருந்து வந்தவர்கள். 'வகையறா என்பது அன்னியச் சொல். 'சாதியென்பதும் தழுவல்: இரண்டும் தேவையற்றவை; ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவை: மக்கள் இனநேயத்தைச் சிதைப்பவை. இவை என் பிள்ளைப் பருவத்தில் எனக்குப் புலப்படவில்லை. வெயில் காய்வதைப் போல, மழை நனைவிப்பதைப் போல. தனித்தனிச் சாதி என்பதை இயற்கையாக ஏற்றுக் கொண்டேன். 'சரியானபடி பார்த்தால், நாம் அய்யர் சமைத்த உணவைக்கூட உண்ணக்கூடாது. 'கொண்டை கட்டி வேளாளராகிய நாம், சிவபெருமானின் சடைமுடி யிலிருந்து தோன்றியவர்கள். நம் முன்னோர்களுக்கு இது தெரியும். 'அவர்கள் அய்யர், அய்யங்கார் வீடுகளில் கூட உண்ணாமல் வாழ்ந்தார்கள். இப்ப காலம் கெட்டுப் போச்சு. அய்யர் கடையிலே சாப்பிடுகிறோம். 'ஆனால் அடுத்த பகுதியில் குடியிருக்கும் வேலு முதலியார் வீட்டில் செய்ததை உண்ணாதே. அப்படியே கடம்பத்துரார் வீட்டில் கொடுப் பதையும் தின்னாதே' என்று என் பாட்டி சொன்னது நினைவிருக்கிறது. 'சரி என்று ஒப்புக் கொண்டேன். ஈராண்டு அக்கட்டுப்பாட்டினை மதித்தேன். பிறகு குலைந்துவிட்டது. அய்யர் உயர்ந்தவர்' என்று அவர்கள் நினைக்க, நாங்கள் அதிலும் உயர்ந்தவர்கள் என்று என் முன்னோர்கள் கருத, காவாந்தண்டலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/76&oldid=787762" இலிருந்து மீள்விக்கப்பட்டது