பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 719 அப்போது, சர்ஜன் ஜெனரலாக இருந்த டாக்டர் செரியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. திருமதி தாராசெரியன், திருமதி. மேரி கிளப்வாலா, திருமதி. கிருஷ்ணமூர்த்தி முதலிய பல பிரமுகர்கள்.அக்குழுவில் உறுப்பினர்கள். இவர்கள், சென்னை, மலைச்சாலை, அரசினர் தோட்டத்தில் ஒரு கண்காட்சியை நடத்தினார்கள். அதில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் ஒன்று, பொம்மலாட்டம். அல்லாவுதினும் அற்புத விளக்கும் என்னும் அரபுக் கதையைப் பொம்மலாட்டதின் வழியாகக் காட்டினார்கள். அது ஒவ்வோர் மாலையும் நடந்தது. மாலை தோறும் இரண்டு மூன்று காட்சிகள் நடக்கும். அப்பொம்மலாட்டத்தின்போது உடனுக்கு உடன் கதையைத் தமிழில் சொல்லக்கூடிய ஒருவர் வேண்டும். இந்தப் பணிக்குப் பெரியவர்கள், என்னை நினைத்தார்கள்.டாக்டர் செரியன் என்னை ஏற்றுக்கொண்டார். அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்த சர் மெவரல் ஸ்டாதம், டாக்டர் செரியனின் நெருங்கிய நண்பர். எனவே, இயக்குநரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்; குறிப்பிட்ட பதினைந்து நாள்களும் மாலை நேரம் என்னை அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இயக்குநர் மறுப்பாரா? மறுக்கவில்லை; உடனே இசைந்தார். என்னை அனுப்பிவைக்கும்படி, இயக்குநர், துணை இயக்குநர் முகமதுவிடம் கூறினார். அவர், சென்னை மாவட்டக் கல்வி அலுவலரிடம் தொலை பேசியில், வாய்வழி ஆணையிட்டார். -- அப்போதைய சென்னை மாவட்டத்திற்கு கல்வி அலுவலர் ஒருவரே. அவர் எவர்? முன்னர், செங்கற்பட்டு மாவட்டக் கல்வி அலுவலராக இருந்து, என்னை ஆதரித்த திரு. சச்சிதானந்தம் அவர்களே. அவர் எனக்குச் சொல்லியனுப்பினார். ஏதோ, என்னவோ என்ற அச்சத்தோடு அவரிடம் சென்றேன். 'உங்களுக்கு டாக்டர் செரியனைத் தெரியுமா?' என்று கேட்டார். 'தெரியாது' என்றேன். அவர் என் சொல்லை நம்பவில்லை என்பது அவர் முகத்தில் கெரிங்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/760&oldid=787763" இலிருந்து மீள்விக்கப்பட்டது