பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு ரி - 1 இரு கப் காப்பிகளுக்கு மட்டுமே சீட்டுகளைப் பயன்படுத்தியதைக் கண்டு அவர் திகைத்தார். உங்கள் செலவில் இப்பணியைச் செய்ய வேண்டுமா? ஏன் இப்படிச் கூச்சப்படுகிறீர்கள்?' என்று உரிமையோடு கேட்டார். பலவேளை, பேசாமல் இருப்பது நல்லது. அவ்வேளை, அவ்வழியைப் பின்பற்றினேன். இதற்கிடையில், ஒருநாள் பொருட்காட்சிக்கு வந்த திரு. ஜேசுதாசன் என்னோடு கலகலப்பாகப் பேசினார். அப்போது, தாமே என் பெயரை, தமது மைத்துனர் டாக்டர் செரியனிடம் சொல்லியதாகக் கூறினார். அப்போதுதான் எனக்குப் புதிர் புரிந்தது. அதை என் மேலதிகாரியிடம் சொல்லி நிறைவு கொண்டேன். 110. பலரின் எரிச்சல் மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு விளம்பரம் சென்னை, தெற்குப் பகுதியின் இளந்துணை ஆய்வாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, எதிர்பார்த்த விளம்பரம் வந்தது; எதிர்பாராத விளம்பரம் ஒன்றும் வந்தது. முந்தையது என்ன? மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, எம்.ஏ, எல். டி. பட்டங்கள் பெற்ற, பார்ப்பனரல்லாத இந்துக்கள் மனுச் செய்யலாம் என்று விளம்பரம் வெளியாயிற்று. மனுதாரர், முப்பது வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. நேரடித் தேர்வுக்கு வருவோர்; ஏற்கெனவே, எந்த அரசுப் பதவியிலும் நிரந்தரமானவராக இருத்தல் ஆகாது என்பது மற்றோர் நிபந்தனை. இப்படியொரு விளம்பரம் வந்தது. எனக்கு, பட்டத் தகுதியிருந்தது; வயதுத் தகுதியும் இருந்தது. மூன்றாவது தகுதி, தற்செயலாக, திரு வரதாச்சாரி புண்ணியத்தால் கிட்டியது. என் முறைக்கு வந்த பிறகு இளந்துணை ஆய்வாளர் பதவிகள் காலியானபோது எல்லாம் உடனுக்குடன் நிரப்பாமல் அவர் தட்டிக் கழித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/762&oldid=787765" இலிருந்து மீள்விக்கப்பட்டது