பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 நினைவு அலைகள் உடனுக்குடன் நிரப்பி இருந்தால் என்னுடைய 'பிரபேசன்’ முடிந்திருக்கும்; மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்குத் தகுதியற்றவ னாகி இருப்பேன். வேண்டுமென்றே, பதவிகளைக் காலியாக வைத்திருந்து என்னை ஒதுக்கி வைத்தது, எண்ணாமற் செய்த பேருதவியாக அமைந்தது. பிறர் செய்யும் தீங்கும் சிலவேளை நல்லதாக முடியலாம் என்ற பாடத்தை அப்போது கற்றேன். அதை எண்ணிப் பிற்காலத்தில் அவ்வப்போது, பலர் செய்த தீங்குகளைப் பற்றிக் குமைவதைத் தள்ளிவிட்டேன். இரண்டாவது விளம்பரம் எதுபற்றி? கல்லூரி விரவுரையாளர் பதவி பற்றி. அப்பதவியும் அம்முறை, பார்ப்பனர் அல்லாத இந்துக்கு உரியது. படிப்பு, வயது, நிலையான அரசு ஊழியத்தில் இல்லாமை போன்ற தகுதிகள் எனக்கு இருந்தன. முந்தைய பதவிக்கு மாதச் சம்பளம் 190 ரூபாய். பிந்தியதற்கு 100 ரூபாய். இரண்டிற்கும் மனுப்போட்டேன். விண்ணப்பம் செய்வோர், அண்மைக் காலச் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். என்னோடு, மாநிலக் கல்லூரியில் பொருளியல் (சிறப்பு) பாடம் படித்துக் கொண்டிருந்த, என் நெருங்கிய நண்பர் திரு. அகாஇலாலி என்பவர், அய்.சி.எஸ். தேர்வு பெற்றுப் புதுதில்லியில் இந்திய அரசின் செயலகத்தில் பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதிச் சான்று இதழ் கேட்டிருந்தேன். அவர், உடனே, அனுப்பி வைத்தார். அது பயன்பட்டது. தில்லிக் கருத்தரங்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே, அகா இலாலி, தில்லியில் பாகிஸ்தானின் துதுவராக அமர்ந்திருந்தார். அப்போது, அனைத்து ஆசியா முழுமைக்குமான கல்வித் திட்டக் கருத்தரங்கு தில்லியில் நடந்தது. இருபத்தொன்பது நாள்கள் நடந்த அக்கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்றது யார்? எளியேன். எப்படிக் கிடைத்தது அந்த பெறற்கு அரிய வாய்ப்பு? பிரதமர் நேருவின் கைப்பட, இந்தியத் துதுக்குழுவின் தலைவராக என்னை எழுதியதால் அவ்வாய்ப்புக் கிட்டியது. அதைப் பற்றி உரிய இடத்தில் விரிவாக எமகவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/763&oldid=787766" இலிருந்து மீள்விக்கப்பட்டது