பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 725 சமயக் கருத்துகளில் இருவருக்கும் மாறுபாடு உண்டு. எனினும் அவருக்குக், குருசாமியின் எழுத்தாற்றல், செயல்திறன், நேர்மை, நாணயம், சலியாத உழைப்பு ஆகியவை தெரியும். எனவே, தமது அமைச்சகத்திற்குத் தற்காலிகமாக மாற்றிக் கொடுக்கும்படி குருசாமியை, பெயர் சொல்லி சென்னை மாகாண ஆட்சிக்கு எழுதினார். அந்த அழைப்பை மறுக்கமுடியாது குருசாமி, இந்திய அரசின் அமைச்சகத்திற்கு மாறிப்போனார். சிவசாமி அய்யர் பள்ளியில் வேலைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் திருமதி. குஞ்சிதம் குருசாமி, மாநகராட்சி உயர்தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை பதவியைப் பெற்றார். அம்மையார், நீண்ட விடுப்பு போட்டுவிட்டுக் கணவர் குருசாமியோடு தில்லிக்குச் சென்றுவிட்டார். அந்நிலையில், எனக்குப் பெரியகுளத்திற்கு மாற்றும் ஆணை வந்ததால், சில மணிகள் வரை என் வீட்டில் உள்ளோர் மகிழ்ந்தார்கள். 'குண்டு போடும் நெருக்கடி நகரத்தில இருந்து விலகி இருக்கலாம்" என்று எதிர்பார்த்தார்கள். மாறுதலை நிறுத்தி வைத்த ஆணை வந்ததைப் பற்றி வீட்டில் மூத்தவர்களுக்கு வருத்தம். அதை மென்று விழுங்கிக் கொண்டு சென்னையிலேயே சற்று எட்டிப்போய் விடவிரும்பினார்கள். -- தியாகராயநகரில், பாண்டி பஜாருக்கு அருகில், மின் நிலையத்திற்கு எதிரில், ஒரு வீடு காலியாயிற்று. திருவல்லிக்கேணி வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்குக் குடியேறினோம். அப்போது வீட்டுப் பொருள்கள் பலவற்றை மூட்டைகட்டி, மதுராந்தகத்திற்கு அப்பால் உள்ள, புலம்பாக்கம் திரு. முத்துமல்லா என்பவர் வீட்டிற்கு, பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தோம். குண்டு வீழுமோவென்று அஞ்சிக் கிடந்தபோது அழைப்பு வந்தது. பேட்டிக்குச் சென்றேன் விரிவுரையாளர் பதவிக்குப் பேட்டிகான அழைக்கப்பட்டேன். அரசு ஊழியர்களைப் பொறுக்கும் குழு பேட்டி கண்டது. பேட்டிக்காக, பதினைந்து பேர்களுக்கு மேல் காத்திருந்தோம். முன்பின் தெரியாதிருந்தும் ஒருவரோடு ஒருவர் பேசிச் கொண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/766&oldid=787769" இலிருந்து மீள்விக்கப்பட்டது