பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72B நினைவு அலைகள் 'அதிலிருந்து மாறும்போதும் அய்ம்பது ரூபாய் ஊதியமே உள்ள, இளந்துணை ஆய்வாளர் பதவியை ஏற்றுக் கொள்கிறீர். உமக்குப் பெரியவற்றின் மேல் நாட்டம் இல்லை என்பதை இவை காட்டவில்லையா? ' 'இம்மதிப்பீடு சரியல்ல; காலத்தை வீணாக்கக்கூடாது என்று அவ்வப்போதைய சூழ்நிலை கொடுக்கும் பதவியை ஏற்றுக்கொண்டாலும், அதுவே போதுமென்று இருக்க விரும்பாமல் அல்லவா அடுத்த வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கிறேன்?' 'என்ன இருந்தாலும், நீர் மாதம் அய்ம்பது ரூபாய்களுக்குமேல் ஊதியம் பெற்றது இல்லையே? H II "கட்டை ஊதியம் என்பது உண்மை; நான் என்னுடைய வேலையின் நேர்த்திக்குத்தான் பொறுப்பு: நிறையச் சம்பளம் பெறாதது என் குற்றமல்ல; நல்ல சம்பளம் கொடுக்கத் தெரியாத இன்றைய சமுதாயத்தின் குற்றம்.' இப்படிப் பதில் கூறுகையில், என் குரலில் பணிவு இல்லை. வெகுளி இருந்தது. கூறி முடித்ததும் அதை உணர்ந்தேன். நான் அமைதிப் படுவதற்கு முன், திரு. இரத்தினசாமி குறுக்கிட்டார். 'மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு உம்முடைய தனியான தகுதி ஏதேனும் உண்டா?' என்று அவர் கேட்டார். அது, மூழ்கப் போகும் வேளை, தோணி கிடைத்ததுபோல் இருந்தது. நான் ஆய்வாளர் பதவியில்தான் இருக்கிறேன். அப்பதவியில் நீடிக்க, சில தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்; அத்தேர்வுகளை விரைந்து முடித்து, வெற்றி பெற்றுள்ளேன். ' 'மேலும் மாவட்டக்கல்வி அலுவலருக்கான தேர்வுகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இவ்வண்ணம் பெரிய பொறுப்புகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பது என் தனித்தகுதி' என்றேன். 'எத்தனை ஆண்டுகளாக, நீர் மக்களோடு தொடர்புடைய புறப்பணிகளைப் புரிந்து வருகிறீர்?" 'அய்ந்தாண்டுகளாக.' 'இந்தக் காலத்தில் எவரோடாகிலும் மோதிக் கொள்ள நேர்ந்ததா?' 'இல்லை'. 'அப்படியென்றால், மறறவாகளோடு ஒத்துழைத்து, மற்றவர்களையும் ஒத்து உழைக்கச் செய்து இயங்கி வந்துள்ளிர் எனலாம்?' என்றார். 'ஆம் அய்யா!' என்றேன். திரு. இரத்தினசாமி மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/769&oldid=787772" இலிருந்து மீள்விக்கப்பட்டது