பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - f 1. நெ து. சுந்தாவடி வேலு 35 - _ வகையறாவும், கடம்பத்துார் வகையறாவும் அப்படியே நினைத்தார்கள் அவர்கள் தனித்தனி. * முற்காலத்தில் எங்களைச் சமபந்தியில் வைத்து உண்ண மாட்டார்கள். எங்கள் வீடுகளில் உண்ண மாட்டார்கள். எல்லோரிடமும் இல்லா விட்டாலும், இளைஞர்கள் இடையிலாகிலும், இன்று ஒருவர் வட்டில் ஒருவர் உண்ணும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் கொள்வினை கொடுப்பினைத் தொடர்பு மட்டும் இன்றும் கிடையாது. ஒரே மாவட்டத்தில், சில இடங்களில் அக்கம் பக்கத்து ஊர்களில் குடியிருக்கும் ஒரே நிலைத் தூய்மையுடைய சைவ முதலியார்கள், மூன்று பிரிவினர்களாகத் தனித் தனியாக இருப்பதை நினைத்தால், இன்று எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. என்னைக் கவர்ந்த திருவிழாக்கள் சமுதாயத்தின் பிரிவினைப் போக்கு இருக்கட்டும். விட்டின் அமைப்பைப் பற்றிச் சொல்கிறேன். எங்கள் வீடு, நெல்லுக்காரத் தெருவில், தென்னண்டை வாடையில், மேற்குப் பாதியில், மண்டபத்திற்கு மூன்றாவது வீடாக இருந்தது. அதை அடுத்துப் பஜனைக்கூடம் ஒன்று இருந்தது. பல நாள்களில் பஜனையோடு பூஜையும் நடக்கும். பிரசாதமும் கிடைக்கும். மார்கழித் திங்களில் நாள்தோறும் மூன்றையும் பெறலாம். நானோ இரண்டை மட்டுமே பெறுவேன். அரைத் தூக்கத்தில் பஜனைப் பாட்டுக்களைக் கேட்பேன். எல்லோரையும் போல் வழிபடுவேன். வெண்பொங்கலோ, சுண்டலோ, பிற பிரசாதங்களோ, வழங்கத் தொடங்கியதும், முன்னே இருந்த நான் எப்படியோ பின்ன்ே போய்விடுவேன். சிறுவனாக இருந்தபொழுதே, கையேந்தி நிற்பதற்கு என் மனம் ஒப்பாது. இடித்துத் தள்ளுகிற மற்றவர்களுக்கு இடம் விட்டு விட்டு அங்கிருந்து நழுவி விடுவேன். ன் வீட்டில் குடியிருக்கும் மற்றவர்கள், பஜனை மடத்தில் தங்கள் 'கைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தால், நான் வெறுங் *யனாக இருப்பதைக் காண்பார்கள். sirఃనా ாடு பங்கிட்டுத் தின்பதற்கு முன்வருவார்கள். அவர்கள் '-பை இழக்கக்கூடாது என்பதற்காக மிகச் சிறிதளவு மட்டுமே 'ர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வேன். 'பிழைக்கத் தெரியாத பிள்ளை' என்று அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் என்னைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டது நினைவி ருக் கிறالتي ،

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/77&oldid=787773" இலிருந்து மீள்விக்கப்பட்டது