பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 நினைவு அலைகள் நல்ல வேளை, சென்னையின்மேல், அன்றோ பின்னரோ குண்டு விழவில்லை. வெற்றி கிடைத்தது குண்டு வெடிப்புப் பேச்சாளர் ஒருவர், மேற்கூறிய பேட்டிக்கு அடுத்த நாள் மாலை, தியாகராயநகரில் நான் தங்கியிருந்த பங்களாவிற்கு வந்தார். அவர் காரை விட்டு இறங்கியதும் என்னைக் கண்டு கொண்டார். 'ஏன், ஐயா! நீ அதிருஷ்டசாலிதான். உன்னை மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுத்து விட்டார்களாமே! கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி! 'உங்க அப்பாவைப்போல, சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிற ஒழுக்கமான அதிகாரியாக இருக்க வேண்டும். 'கல்வித்துறை அவங்க கையிலே; ஏமாந்தே, கவிழ்ந்துவிடுவே!" இப்படி மடமடவென்று, உலாவியபடியே சொற்களைப் பொரிந்தார். அவருடைய உரத்த குரலைக் கேட்டு, பின் தோட்டத்தில் இருந்த என் மாமனார் விரைந்து வந்தார். நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டு, உட்காரும்படி வந்த பெரியவரை வேண்டினார். காப்பி கொண்டு வரட்டுமா என்று வேண்டினார். பெரியவர், அவற்றிற்குப் பதில் சொல்லவில்லை. 'உம்பாடு அதிருஷ்டம்; எங்க சாதிக்கு அதிருஷ்டம் இல்லை. உங்க மாப்பிள்ளை பெரிய பதவிக்குப் போகப் போகிறார். எங்க சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், எங்களுக்குப் பெருமையாக இருந்திருக்கும். விரைந்து மயிலாப்பூர் போக வேண்டும் ' என்று சொல்லியபடியே வெளியே சென்று, தம்முடைய காரில் ஏறிப் போய்விட்டார். அப்பெரியவர் யார்? புகழ்பெற்ற சூணாம்பேட்டை ஜமீன்தார் திவான் பகதூர் அருணாசல முதலியார். 112. என் மகிழ்ச்சிக்கு அளவேது? வெற்றி உறதியாயிற்று 'சென்னையின்மேல் குண்டு விழுமோ அது நான் இருக்கும் பக்கம் விழுமோ எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ தீங்கு வராமல் இருக்க வேண்டுமே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/771&oldid=787775" இலிருந்து மீள்விக்கப்பட்டது