பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 731 இப்படி நினைத்துக் கொண்டிருந்த என்னிடம் ஒரு இனிக்கும் செய்தியை வலிய வந்து சொல்லிவிட்டுப் போனார் குறுநிலக்கிழார். அதை நம்ப விரும்பினேன்; அது மெய்யாவென்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். எவரிடம் கேட்பதென்று தெரியாது தவித்தேன். அடுத்த நாள் காலை, திரு. அய்யாசாமியைத் தேடிச் சென்றேன். முந்திய மாலை முதலியார் கூறியதைக் கூறி. உண்மையாக இருக்குமா என்று கேட்டேன். "உண்மையாக இருக்கட்டும்" என்ற வாழ்த்தினாரேயொழிய வேறு குறிப்பு ஏதும் காட்டவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன். தேர்ந்தெடுக்கப்பட்டேன்' என்ற செய்தி உறுதிப்படவில்லை: மறுக்கப்படவும் இல்லை. இப்படிச் சில நாள்கள் கழிந்தன. ஒருநாள் பேராசிரியர் இராமநாதன் பிள்ளை என்னைத் தேடிவந்தார். அப்போது நான் வீட்டில் இல்லை. வீடு திரும்பியதும் தகவல் கிடைத்தது. அடுத்த கணமே பேராசிரியரைத் தேடிச் சென்றேன்; கண்டேன். நான்கைந்து நாள்களுக்கு முன்பே, நல்ல செய்தி கேள்விப்பட்டேன். உடனே வந்து சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நேரம் ஒழியவில்லை. 'இன்று காலை, கல்லூரிக்குப் போகும் வழியில் உங்கள் வீட்டிற்கு வந்தேன். நீங்கள் இல்லை. மற்று எவர் இடமும் சொல்ல வேண்டாம் என்று வந்துவிட்டேன்' என்று பேச்சை நீட்டினார். 'என்ன செய்தி அய்யா!' என்ற ஆவல் பொங்கக் கேட்டேன். 'உங்களை மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்' என்று சொன்னார். 'இது தங்கள் வாழ்த்தா? பலித்துவிட்ட விழைவா?' என்று கேட்டேன். "அப்பதவிக்காகப் பேட்டி நடந்த அன்று மாலை, பொதுக்கல்வி இயக்குநர், துணை இயக்குநர் திரு. வி.ஆர். அரங்கநாத முதலியாரைக் கண்டாராம். 'நம்மிடம் இளந்துணை ஆய்வாளனாகப் பணிபுரியும் ஒருவரை, இன்று மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்து எடுத்துள்ளோம். அவர் நல்ல பெயர் எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்' என்று இயக்குநர் கூறினாராம். 'முதலியார், வீடு திரும்பும்போது என்னிடம் வந்து, அந்தச் செய்தியைச் சொன்னார். சிறிது நேரத்தில், சூணாம்பேட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/772&oldid=787776" இலிருந்து மீள்விக்கப்பட்டது