பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 நினைவு அலைகள் ஜமீன்தாரை நான்கான நேர்ந்தது. கேள்விப்பட்ட செய்தியை என்னால் அடக்கி வைக்க முடியவில்லை. அவரிடம் சொல்லி விட்டேன். 'உங்களவர் ஒருவர் மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்' என்று அவரிடம் கூறினேன். 'அவர் பெயரென்ன? என்று கேட்டார். உங்கள் பெயரைக் கேட்டதும், 'அவனும் குருசாமியும் (குத்துாசியார்) சாதி விட்டுப் போய்விட்டார்களே! எப்படி எங்களவர் ஆவார்கள் என்று சொன்னபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது' என்று பேராசிரியர் இராமநாதன்பிள்ளை கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அவர் கொடுத்த காப்பியை அருந்திவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். இவர் தாவர இயல் பேராசிரியர். இவர் நீண்ட காலம் அரசின் கல்வித்துறையில் கல்லூரிப் பிரிவில் பணிபுரிந்தார். அரசுக் கல்லூரி முதல்வராக இருந்து ஒய்வு பெற்ற பின் மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும், மயிலாடுதுறைக் கல்லூரியிலும் முதல்வராக நற்பணியாற்றினார். மயிலாடுதுறை ஆண்கள் கல்லூரி தொடங்கி நிலை பெற உறுதுணையாக இருந்தார். இவர் சில ஆண்டுகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவித் துணைவேந்தராக இருந்தார். அதற்குமுன் பல ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தார். இரண்டு வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன; கிணற்றில் கல் போட்டது போல் இருந்தது; மேற்கொண்டு எவ்விதத் தகவலும் இல்லை. அந்நாள்களில், மூன்று நான்கு முறை திரு. அய்யாசாமியைப் பார்த்தேன். தெரிந்தால், நானே வந்து சொல்லுகிறேன், சாமி! இதற்காக நீ எதற்கு அலைய வேண்டும்' என்றார். கடைசிமுறை, போர்க்கால எச்சரிக்கையாகத் தெருவிளக்குகள் நிறுத்தப்பட்டிருந்த இரவு, வீட்டுச் சாளரங்களில் வெளிச்சம் வராதபடி அடைத்து இருந்தபோது, அய்யாசாமி பேசாமல், என் கையைப் பிடித்துக் குலுக்கினார்; வாய் திறக்கவில்லை. குறிப்புத் தெரியாமல் குழப்பத்தோடு வீடு திரும்பினேன். அரசு ஆணை வந்தது அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். அலுவலகம் பொதுக்கல்வி இயக்ககத்தின் ஒர் அறையில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/773&oldid=787777" இலிருந்து மீள்விக்கப்பட்டது