பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து: சுந்தரவடிவேலு 37 திரு.வி.க., இராஜாஜி, பெரியார் போன்றவர்கள், கொள்கைகளில் எதிர் அதிர் வரிசைகளில் நிற்க நேரிட்டபோதும், மனித அன்பு அறாதவர்களாக, நல்ல நண்பர்களாகக் கடைசிவரை வாழ்ந்தார்கள். இந்தப் பண்பு வாழையடி வாழையாக வளர வேண்டாமா? காஞ்சியில் நான் கண்ட புதுமைகள், விழாக்கோலங்கள், கிடைத்த ஒன்பண்டங்கள் ஆகியவை, அப்பா அம்மாவை மறந்து இருக்க எனக்கு உதவின. என் வகுப்பு ஆசிரியர் நான் குடியிருந்த வீட்டிற்குச் சில வீடுகளுக்கு அப்பால் தேவல்ல இராமசாமி அய்யர் செகண்டரி பள்ளி நடந்து வந்தது. அது பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வந்தது. இன்றும் சிறப்பாக நடக்கிறது. ஆனால் இடம் மாறியுள்ளது. டி.ஆர். பள்ளியென்று சுருக்கமாக அழைக்கப்படும் புகழ்பெற்ற அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். என்னை எடை போட்டுப் பார்த்தார்கள். மூன்றாம் வகுப்பிற்குத் தகுதி என்று முடிவு செய்தார்கள். அதில் சேர்ந்தேன். நாட்டுப்புறப் பள்ளியிலிருந்து நகரப் பள்ளிக்கு மாறியதால், கீழ் வகுப்பிற்குத் தள்ளாத காலம் அது. அன்று நடுநிலைப் பள்ளிவரை, பாடத்திற்கு ஒர் ஆசிரியர் என்று இல்லை. ஒரு வகுப்பிற்கு ஒர் ஆசிரியர் என்ற முறையே இருந்து வந்தது. என் வகுப்பு ஆசிரியரின் பெயர் திரு. வைத்தியநாதசாமி அய்யர். அவரது உயரம் ஆறடிக்கு மேல்; நிறம் மாநிறம், சிடு சிடுப்பு இல்லாத தோற்றம். அவர் தூய வெள்ளைப் பஞ்சகச்சம், நீண்ட கறுப்பு மூடு கோட்டு, தும்பை மலர் வெண்மையுடைய உயரமான தலைப்பாகை ஆகியவற் றோடு வகுப்புக்கு வருவார். அவருடைய தோற்றப் பொலிவு எங்களைக் கவர்ந்தது. ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்ததும், பூட்டி வைத்துள்ள மேசையைத் திறப்பார் நீண்ட பிரம்பை எடுத்து மேசையின் மேல் வைப்பார். அப்புறம் மாணவர்கள் வருகைப் பதிவை முடிப்பார். பிறகு பாடங்களை நடத்துவார். இருவேளையும் பள்ளி உண்டு. இடைவேளையில் எல்லாரும் °ட்டுக்குப் பறந்து செல்வோம். உண்டுவிட்டுத் திரும்பி வருவோம். பள்ளிக்கூடப் புறக்கடையில் சிறிது திறந்தவெளி ஒன்று இருந்தது. -="- R. H. s H == = -- - -- 畢 in அங்கே டிரில் நடக்கும். பரந்த விளையாட்டுத் திடல் இல்லாமை ஒரு குறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/79&oldid=787784" இலிருந்து மீள்விக்கப்பட்டது