பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
1983-ஆம் ஆண்டு வெளியான முதற்பதிப்பிற்கு
டாக்டர் நெ. து. சு. அவர்கள் எழுதிய முன்னுரை
 

உலகம் பழையது! இந்தியா பழம் பெரும் நாடு! தமிழகம் பழைய பகுதி. அதில் ஒரு சிற்றுார். பல நூற்றாண்டுகளாகப் பண்பட்ட அச் சிற்றுரரின் பெயர் நெய்யாடு பாக்கம். நான் அவ்வூரில் பிறந்தேன். திண்ணைப் பள்ளிக் கூடமும் இல்லாத காலத்தில் வளர்ந்தேன்.

காலத்தின் எழுச்சி, என்னைக் கல்வியின்பால் செலுத்தியது. அக் காலக் குக் கிராம இளைஞர்கள், கனவு காண முடியாத உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றது.

1933 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை (சிறப்பு)ப் பட்டம் (B.A. Hons) பெற்றேன். இப் பல்கலைக் கழகம் 1983 இல் என் தொண்டினைப் பாராட்டி இலக்கிய அறிஞர் (D.Litt) என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்திற்று. இவை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கருமமே கண்ணாயிருக்கத் துண்டுவதாக!

சென்னை மாகாணக் கல்வித் துறையின் முதற் படியில் கால் எடுத்து வைத்தேன்; மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தேன்; மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பணி புரிந்தேன்; பொதுக்கல்வித் துணை இயக்குநரானேன். பிறகு சென்னை மாகாணப் பொதுக்கல்வி இயக்குநர், பொது நூலக இயக்குநர் மற்றும் அரசுத் தேர்வுகளின் ஆணையர் எனப் பதவி உயர்வு பெற்றேன்.

நான்துணை இயக்குநராக இருந்தபோது, இயக்குநராக இருந்த திரு. சதாசிவ ரெட்டியார், ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரிய நாட்டிற்கு யூனெஸ்கோ சார்பில், கல்வி இயக்குநராகப் பதவியேற்றுச் சென்றார்கள். அவர்கள் தன்னோடு, துணை இயக்குநராக வரும்படி என்னை அழைத்தார்கள். தாய் நாட்டுப் பற்று என்னை இங்கேயே நிறுத்திக் கொண்டது.

இயக்குநராக இருந்த பிறகு, தில்லியில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் இணைக் கல்வி ஆலோசகராகப் பணி புரிந்தேன். அடுத்து, தமிழக அரசின் தலைமைக் கல்வி ஆலோசகர், மற்றும் கூடுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/8&oldid=1204956" இலிருந்து மீள்விக்கப்பட்டது