பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவு அலைகள் == காலையில் தம் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போதும் மாலையில் வீடு திரும்பும்போதும் என் வீட்டைத் தாண்டியே செல்ல வேண்டும். அப்படிச் செல்கையில் அவர் என்னைப் பார்த்தது உண்டாம். என்ன காரணத்தாலோ அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. 'உயர்நிலை வகுப்புகளுக்கு வந்தால் மூன்றாண்டே இருப்பான். இப்போதே நம் பள்ளிக்கு வந்துவிட்டால், ஏழாண்டுகள் இருப்பான், அவ்வளவு நீண்ட காலத்தில் இச்சிறுவனைச் சரியானபடி ஆளாக்கி விடலாம். இப்படி ஓடியது அவருடைய சிந்தனை. நான் பள்ளிக்கூடப் படிப்பு பெற்ற காலத்தில், கிறுத்துவப் பள்ளிகளில், கிறுத்துவம் ஏட்டோடு நிற்கவில்லை. மக்கள் தொண்டாகச் செயல்பட்டது. கிறுத்துவத்தைச் சாராத பொது மக்களுக்குத் தொண்டாக மணம் வீசியது. 'பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறாயோ, அப்படியே நீ பிறரிடமும் நடப்பாயாக’ என்னும் ஏசுவின் அருள் மொழியை நடைமுறைப்படுத்த முயன்றனர் அக்காலக் கிறுத்துவ ஆசிரியர்கள். 'உன்னைப் போலப் பிறரையும் நேசிப்பாயாக' என்ற ஏசுநாதரின் கட்டளையை நிறைவேற்றுவதிலேயே முனைப்பாக இருந்தார்கள். இவ்வுணர்வுகள் பொங்கி வழிந்ததால், நாலு சமயத்தவரையும் தேடிப் பிடித்து, ஆளாக்கினார்கள். எல்லாச் சாதியாரையும் நாடி ஆளாக்கினார்கள். திரு. ஞானாதிக்கம் என்னைத் தம்முடைய பள்ளிக்குக் கொண்டு போக விரும்பினார்; கிறுத்துவனாக்கலாம் என்னும் எண்ணத்தால் அல்ல. தம்முடைய அவ்விருப்பத்தை, ஏற்கெனவே அப்பள்ளியில் படித்து வந்த என் தாய் மாமன் திரு. சுந்தரசேகரிடம் தெரிவித்தார். அவர், அதை என் தந்தையிடம் கூறினார். அவ்வளவு பெரியவர் கேட்பதை மறுக்க மனமில்லாமல், என் தந்தை, பள்ளி மாற்றத்திற்கு உடன்பட்டார். என் சாதி அகந்தையின் கூர் மழுங்கிற்று 1921 இல் சேர்ந்து ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரை ஒரே யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். ஒடுகாலாக நேரிடாததே ஒரே சூழலில் கற்று வளர்ந்ததே எவருக்கும் நல் வாய்ப்பாக அமையும். என்னுடைய வாய்ப்போ வேறொரு நன்மையையும் நல்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/84&oldid=787790" இலிருந்து மீள்விக்கப்பட்டது