பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- _ -- - ஒரு து சுந்தாவ: ; тичу _433. பெரிய சாதி சூழலில் பிறந்து, பெரிய வீட்டு 'ப் பிள்ளையாக ஆணர்ந்த எனக்கு, அதுவரை பல சமய, பல சாதி மாணவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தேவல்ல இராமசாமி பள்ளியிலும் நான் படித்தபோது, இந்துக்கள் ,_டுமே இருந்தார்கள். மேட்டுக் குடியினரே மாணவர்கள். இக்கிறுத்துவப் பள்ளியில்தான் என்னுடன் சேர்ந்து பல சாதி ,ானவர்கள் படித்தார்கள். கிறுத்துவர்கள், இஸ்லாமியர்கள், ,னர்கள் ஆகியோர் என் சகாக்கள் ஆனார்கள். இது. என் சாதி அகந்தையைக் கூர்மழுங்கச் செய்தது. சமயப் பொறையை முளைகக வைததது. எவருடைய சாதியையும் சமயத்தையும் பொருட்படுத்தாமல், அவரவருடைய மனிதத் தன்மையைக் கொண்டு மதிப்பிடும் போக்கினைக் கருக்கொள்ளச் செய்தது. இவற்றிலும் மேலான ஒர் அருளைக் காணும் பேறு எனக்குக் கிட்டிற்று. பிற பள்ளிகளில் படித்திருந்தால் அப்பட்டறிவு கிட்டியிராது. அப்பட்டறிவு கிட்டியிராவிட்டால், நான் நல்லவனாகி இருக்க மாட்டேன். மானுடப் பெருங்கடலைச் சேர்ந்த பல்லாயிரம் கோடி துளிகளிலே நானும் ஒருவனாக இருந்திருப்பேன். எண்ணற்றவர்களைப் போல் வெகுளி, வஞ்சினம், பழி வாங்குதல் ஆகிய கொடிய சூறாவளிகளில், நானும் சிக்கிச் சீரழிந்திருப்பேன். அப்படிப் பாழாக்காமல் என்னைக் காப்பாற்றியது ஒரு நிகழ்ச்சி. பொறை தோய்ந்த அந்த நிகழ்ச்சி, என்னில் கலந்துவிட்டது. என்னைப் புதியவனாக்கி விட்டது. அது, அரை நூற்றாண்டுக் காலமாக எனக்குக் கைவிளக்காகப் பயன்பட்டு வருகிறது. நல்வழி காட்டி நடத்தி வருகிறது. அந்த அற்புத நிகழ்ச்சி என்ன? அது வெளியிட்ட அழியாத பே ரொளிதான் என்ன? அதைக் காட்டுமுன், மற்ற ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி விடுகிறேன். ஆசிரியர் சமாதானம் உச்சி விளக்கோடு நிற்கலாமா அதற்குத் துணையாக விளங்கும் | 2 மாடி விளக்குகளையும் காட்டினால் மட்டுமே முழுமை பறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/85&oldid=787791" இலிருந்து மீள்விக்கப்பட்டது