பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*15 நினைவு அலைகள் - - -- எங்கள் பள்ளியில் நான் திரட்டிய நிதியே அதிகப்படியானது என்று அறிவிக்கப் பட்டபோது பரவசமானேன். இன்னும் சில ஆசிரியர்கள் திரு. செல்லய்யா என்பவர் மற்றோர் ஆசிரியர். கெட்டிக்காரர்; நல்லவர்.திருவாளர்கள் பிரகாசம், தேவசகாயம், பாக்கியநாதன், பொன்னையா, சேஷாத்திரி அய்யங்கார் சங்கர அய்யர் ஆகியோர் எனக்கு உயர்நிலை வகுப்புகளில் பாடஞ் சொல்லியவர்கள். என் தமிழ் ஆசிரியர் பெயர் திருவாளர் நரசிம்மாச்சாரியார். இவர்கள் அனைவரும் கண்டிப்பையும் மெய்யான அன்பையும் சொத்தாகக் கொண்டவர்கள். 'கட்டுப்பாடு, கல்வியின் உயிர்நாடி' என்பதை அவர்களிடம் கல்லாமல் கற்றோம். தலைமை ஆசிரியர் ஞானாதிக்கம் தலைமையாசிரியர் திரு. ஞானாதிக்கம், உதவித் தலைமையாசிரியர் திரு. பொன்னையா ஆகிய இருவரும் ஒழுங்கு காப்பதில் மற்றவர் களுக்கு முன் மாதிரிகளாக விளங்கினார்கள். வேண்டித் தம் பள்ளிக்கு என்னை அழைத்த தலைமை ஆசிரியர், எனக்கு எவ்விதத் தனிச் சலுகையும் காட்டவில்லை. மற்றவர்களிடம் காட்டிய கண்டிப்பையே என்னிடமும் காட்டினார். மாணவர்கள் நேரம் தவறாமல் வரவேண்டுமென்பதில், திரு. ஞானாதிக்கம், 'நெருப்பாக இருந்தார். பள்ளியில் தொடக்க மணி அடித்ததும், அவர், நுழைவாயிலில் வந்து நின்று விடுவார். நேரங்கழித்து துழைபவர்களுக்குப் பிரம் படி கிடைக்கும். அந்த உயர்நிலைப் பள்ளியில் ஏழாண்டுகளில், ஒரே ஒருமுறை மட்டுமே, நான் மணி அடித்தபின் உள்ளே சென்றேன். தலைமை ஆசிரியர் சினத்தோடும் பிரம்போடும் நிற்பதைக் கண்டேன். என்னைக் கண்டதும் பிரம்பை ஓங்கினார். நான் நடுநடுங்கிப் போனேன். ஆனால்? அவருடைய பிரம்பு என் கைமேல் வீழ்ந்தபோது வலிக்கவில்லை. கடிது ஒச்சி, மெல்ல எறியும் கலையில் வல்லவர், எங்கள் தலைமையாசிரியர் என்பதை அன்று அறிந்து கொண்டேன். அப்போக்கு என்னுடையதாகி விட்டது. திரு. ஞானாதிக்கம் கற்றுக் கொடுத்த போக்கு, என் நீண்ட காலத் தொண்டின்போது, நான் யார் வயிற்றிலும், என் முதுகிலும் கூட, ஒங்கி அடிக்காதபடி, என்னைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்திக்காத்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/88&oldid=787794" இலிருந்து மீள்விக்கப்பட்டது