பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நினைவு அலைகள் - நாங்கள் மாற்றுக் கருத்துகளைக் கண்டு மருளமாட்டோம் துணிந்து கூறி உதவுங்கள் என்று அன்புடன் வேண்டிக் கொண்டார். அரசியல் உரிமை இல்லாத காலத்திலேயே பேச்சுரிமை வழங்கிய அமைச்சரை, விழாவிற்கு வந்திருந்த பலர் பாராட்டக் கேட்டேன். அவரோடு அரசியலில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தவர்களும் அவருடைய உயர்ந்த பண்பாட்டை மிகவும் வியந்து பாராட்டினார்கள். தாளாளர் ரெவரெண்ட் மெக்லீன் எங்கள் பள்ளியின் தாளாளரைப் பற்றிச்சொல்ல மறந்து விட்டேனே! அவர் தங்கமானவர்; சொல்லும் செயலும் ஒன்றானவர். அவர் பெயர் ரெவரெண்ட் மெக்லீன் என்பதாகும். அவர் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். கிறுத்துவ சமயப் போதகராகக் காஞ்சிபுரத்தில் தொண்டாற்றி வந்தார். அவரே எங்கள் யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளியின் தாளாளர். அவர் ஆறாம் படிவத்துக்கு பைபிள்' பாடம் நடத்துவார். நான் அவரிடம் பைபிள் பாடம் கற்றவன். 'என்ன? அக்காலக் கிறுத்துவப்பள்ளியில், இந்துப் பையன்களும் கிறுத்துவ வேதம் படிக்க வேண்டுமா?’ என்று மலைக்காதீர்கள். அப்படி யொன்றும் கட்டாயமில்லை. வேத பாடம் அல்லது 'ஒழுக்க பாடம்' என்பது பாடமுறை. கிறுத்துவ மாணவ மாணவிகள் வேத பாடமே படிக்க வேண்டும். இந்து, இஸ்லாமிய மாணவர்களுக்கோ 'ஒழுக்க பாடம்.' = நான் இப்பள்ளியில் சேர்ந்தபோது, 'உங்களுக்காக ஒழுக்க பாடம் நடத்துகிறோம்'. 'வேத வகுப்பு நீங்கள் நுழையக் கூடாத இடம் அல்ல. "கிறுத்துவர் அல்லாதவரும், விரும்பினால் அதைப் படிக்கலாம்: அந்த உரிமை உண்டு. ஆகவே உங்கள் விருப்பப்படி எந்தப் பாடத்தைப் படிப்பதென்று முடிவு செய்யுங்கள்,' என்று அறிவிக்கப்பட்டது. பைபிள் படித்தேன் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை'. அதை என் தந்தையிடம் கூறினேன். "கிறுத்துவ வேதத்தைப் படிப்பதால் நீ ஒன்றும் கிறுத்துவனாக மதம் மாறிவிடப் போவதில்லை. நீ, பிறிதொரு சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதே. ஒழுக்கப் பாடத்திற்குப் பதில், 'பைபிள்' பாடத்தையே எடுத்துப்படி' என்றார். என் தந்தை அவ்வளவு உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது எதனால்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/90&oldid=787797" இலிருந்து மீள்விக்கப்பட்டது