பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 51 சைக்கிள் விடக் கற்றுக்கொண்டேன் பதின்மூன்று வயது முதல் சில ஆண்டுகள்வரை எனக்குச் சைக்கிள் விடுவதில் மோகம். வாடகை வண்டிகளைக் கொண்டு, சைக்கிள் விடக் கற்றுக் கொண்டேன். என் நண்பர் ஒருவர் புதிய பி.எஸ்.ஏ. சைக்கிள் வாங்கினார். சில தடவை நானும் அவரும் மாறி மாறி விட்டுப் பார்த்தோம். ஒரு தடவை, அவர் சைக்கிள்விட, நான் அவர் பின்னால் நின்றுகொண்டு பயணம் செய்தேன். வேகமாக ஒர் மூலையில் திரும்பும்போது பின் சக்கர உருளையின்மேல் வைத்திருந்த என் இடதுகால் நழுவிற்று. நொடியில், சமாளிப்பதாக, நினைத்துக்கொண்டு, காலைத்துக்கி வைத்தேன். இடது கனுக்கால் சக்கரக் கம்பிகளுக்கிடையில் சிக்கியது. பொத் தென்று இருவரும் வீழ்ந்தோம். என் காலில் இருந்து இரத்தம் வடிந்தது. கணுக்காலில் சதை பிய்த்துக் கொண்டது; எலும்பு தெரிந்தது. அங்கே ஏற்பட்ட வடு, என்னுடைய ஆள் அடையாளங்களில் ஒன்றாக நிலைத்துள்ளது. அடிபட்ட நான், கிறுத்துவ மருத்துவ சாலைக்கு மாட்டு வண்டியில் சென்றேன்; கட்டுப் போட்டுக்கொண்டு, அதே வண்டியில் வீடு திரும்பினேன். ஒரு வாரத்திற்குமேல் நான் பள்ளிக்குப் போகவில்லை. புண் ஆறினதும் பள்ளிக்குச் சென்றேன். கணக்கு வகுப்பு வந்தது. திரு. சேஷாத்திரி அய்யங்கார் வந்தார். நான் மீண்டும் வகுப்புக்கு வந்திருப்பதைக் கவனித்தார். - வெகுளாமல், இனிமையாக, "உன் உடம்பிற்கு என்ன என்று கேட்டார். நடந்ததைச் சொன்னேன். அய்யங்கார் வெகுண்டாரா? கிண்டல் செய்தாரா? வால் பிடிக்க வேண்டாம்! என்னுடைய கணக்கு ஆசிரியர், திரு. சேஷாத்திரி அய்யங்கார், எவ்விதப் படபடப்பும் இல்லாமல், மிக அமைதியாகக் கூறிய அறிவுரை: 'வேலு, நீயாக எதையும் ஒட்டு அதில் தவறினாலும் பரவாயில்லை. பிறருக்கு வால்பிடிக்கும் போக்கு மட்டும் எப்போதும் வேண்டாம்.' இந்தக் கருத்துரை, உலகம் அறியாத என் பிஞ்சு உள்ளத்தில் '* மரத்தானி போல் பதிந்துவிட்டது. வால் பிடிக்காமை என் இயல்பாகி விட்டது. இளமையில் உருவான இயல்பு மாற மறுக்கிறது. காலம் 'ாறிவிட்டது. என்ன தெரியும் எனபதைவிட, யாரைத் தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/93&oldid=787800" இலிருந்து மீள்விக்கப்பட்டது