பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நினைவு அலைகள் - என்பதே கவனத்திற்குரியது. சான்றோரைவிடத் தொடர்ந்தோரையே விரும்பும் காலம் இது' என்று உலகம் உணர்த்தினாலும், வால் பிடிக்கா இயல்பினை என்னால் விடமுடியவில்லை. பிற்காலத்தில் இதனால் நான் பட்டபாடு கொஞ்சமல்ல. இன்று படும்பாடும் சிறிதல்ல. இந்தப் பாடும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. பிற சொற்களைக் கலக்காதீர்! என் உயர்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு. பொன்னையா ஆவார். அவர் தலைமை ஆசிரியரைவிடக் கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர். அது எவ்வளவு தூரம் உண்மையோ! நான் நேரில் உணரும் வாய்ப்பு கிட்டவில்லை. திரு. பொன்னையாவிடம் நான் ஆங்கிலம் படித்தேன். நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் ஒரு தொல்லை, ஆங்கில வகுப்பில் ஆங்கிலத்தில்தான் பதில் சொல்ல வேண்டும்; தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. இவ்விதி எங்களிடையே ஆங்கிலத்தில் பேசும் பழக்கத்தை வளர்த்தது. வாய் நிறைந்த கொழுக்கட்டையை விழுங்கத் திண்டாடும் குழந்தைகளின் நிலையில் நாங்கள் தவித்தோம். தமிழிலேயே பேசும் என்னைப் போன்றவர்களை தமிழ் வெறியர்கள் என்று வன்மையாகக் குற்றஞ்சாட்டுவதை என் காதுகள் பல்லாண்டுகளாகக் கேட்டுக் கொண்டு வருகிறது. ஆனால், திரு. பொன்னையாவை யாரும் ஆங்கிலப் பித்தன்' என்று குறை கூறவில்லை. கூறாததே நீதி. உப்புக் கேட்டால் அதோடு சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொடுப் பார்களா? சர்க்கரை, உப்பைவிட அதிக விலையானது என்பதற்காகவும் அதை உப்போடு கலந்துபெற, நம் அறிவு ஒப்புவதில்லை அல்லவா? 'உப்பு உப்பாகவும், சீனி சீனியாகவும் தனித்தே இருக்கட்டும்' என்பது எப்படிப் பொருள் வெறியாகும். அப்படியே, ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பேசுவதுபோல் தமிழைத் தமிழாகவே பேசுங்கள்; எழுதுங்கள்; எவ்வளவு மதிப்பானதாயினும் பிறசொற்களைக் கலக்காதீர்கள் என்று சொல்லும் போது மட்டும், ஏனோ நடுநிலைமையை இழந்து விடுகிறார்கள்? அழுக்காறு இல்லாத ஆசிரியர்கள் உயர்நிலை வகுப்புகளில் எனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் இருவர். திரு. கு. பிரகாசம் என்பவர் மூத்தவர்; திரு. தேவசகாயம் என்பவர் அடுத்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/94&oldid=787801" இலிருந்து மீள்விக்கப்பட்டது