பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 53 இருவருமே இனிய இயல்பினர். எல்லோரும் அவர்களுடைய வகுப்புகளை விரும்புவார்கள். திரு. கு. பிரகாசம், பின்னர், அரக்கோணம் கிறுத்துவ உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியர் ஆனார். நல்ல பணியாற்றினார். ஆனால் அந்தக் காலத்தில் ஆசிரியர் விருது முறை முளைக்க வில்லை. எனவே, எல்லோரையும் போலவே ஒய்வு பெறும் வயதில் ஒய்வு பெற்றார். திரு. தேவசகாயம், காஞ்சியை விட்டுவிட்டுத் திண்டுக்கல்லுக்குச் சென்றார். அங்கே தூய.மேரி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணிபுரிந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் மதுரை மாவட்டக் கல்வி அலுவலன் ஆனேன். அந்நிலையில், அப்பள்ளியின் ஆய்வுக்காகச் சென்றேன். என் நல்லாசிரியரைக் கண்டு மகிழ்ந்தேன். தம் மாணவன், தம்மினும் சிறந்த பொறுப்பிற்கு உயர்ந்துள்ளதைக் கண்டு அவர் மனம் பூரித்துப் போனார். அவரிடம் அழுக்காற்றின் இழை சிறிதும் ஒடவில்லை. நான் கணக்கையும் பெளதிகத்தையும் விருப்ப பாடமாகப் படித்தேன். திரு. சேஷாத்திரி அய்யங்காருக்குப் பிறகு திரு. பாக்கியநாதன், எனக்குக் கணக்குப் பாடம் கற்பித்தார். இவரையும் மாணவர்களுக்குப் பிடிக்கும். மிகப் பொறுமையோடு சொல்லிக் கொடுப்பார் என்றைக்கும் சிடுசிடுக்க மாட்டார். அன்பும் பண்பாடும் மேற்கூறிய மூவரிடமும் மிளிர்ந்தன. எங்கள் தமிழ் அய்யா திரு. நரசிம்மாச்சாரியார். அவர் வைதீ வைணவர். இக்காலத் தமிழ் அய்யாக்களைப்போல ஏன், ஆசிரியர்களைப் போல - கண்ட உடையில் வரமாட்டார். 'சரக்கு மிடுக்கா செட்டியார் மிடுக்கா? என்பது பழமொழி. கல்வி வணிகர்களுக்கு இரண்டு மிடுக்கும் தேவை. அக்கால ஆசிரியர்களுக்கு யாரும் கைநிறையச் சம்பளம் கொடுக்கவில்லை. இழுபறி வாழ்க்கையே பல ஆசிரியர்களுடையது. ஆயினும், தோழனோடும் ஏழமை பேசேல் என்னும் நல்வழியை "பிர்கள் பின்பற்றினார்கள். தங்களுக்குள்ள வறுமையை ஊரறியப் ”றசாற்றி, மாணவர்கள் முன், தங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. தாங்களே மதிப்பைக் குறைத்துக் கொண்டு, பின்னர் மேடைதோறும் 'களை மதிப்பாரில்லையே. என்று ஒப்பாரி வைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/95&oldid=787802" இலிருந்து மீள்விக்கப்பட்டது