பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவு அலைகள் ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதை உணர்ந்து, எல்லா ஆசிரியர்களும் மதிப்பான உடையில் பள்ளிக்கு வந்தனர். என் தமிழ் ஆசிரியர் திரு. நரசிம்மாச்சாரியார், கீழ்ப்பாய்ச்சுவைத்துக் கட்டிய வேட்டியோடும், மூடு கோட்டோடும், உயர்ந்த தலைப்பாகை யோடும் பள்ளிக்கு வருவார். இதில் எதுவும் அழுக்குப் படிந்திராது. அவர் நெற்றியைத் திருமண் அலங்கரிக்கும். i. அவருடைய தமிழ்ப் பாடம் எனக்குப் பிடிக்கும். என் நெஞ்சில் தமிழ்ப் பற்றினை முதலில் விதைத்த பெருமை அவரையே சாரும். தமிழ் ஆசிரியர் திரு. நரசிம்மாசாரியாரும் மாணவர்களிடம் சாதிப் பாகுபாடு காட்டியது இல்லை. மறக்க முடியாத 'குட்டு ஒன்றினை நான் அவரிடம் பெற்றேன். அவருடைய வகுப்பு ஒன்றில், செய்யுள் ஒப்புவித்தலில் நான் தடுமாறினேன். தமிழ் அய்யாவுக்கு வெகுளி பொங்கவில்லை; அவரைச் சோகம் கெளவியது. அவர் என்னைப் பார்த்து, 'நீ என்ன சாதி ' என்று கேட்டார். அப்பள்ளியில், சாதியைக் கேட்ட நிகழ்ச்சி, அப்போதுதான் நிகழ்ந்தது. நான் திடுக்கிட்டேன். 'தெரியாது' என்று சொன்னேன். 'உனக்குத் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரியும், சொல்லட்டுமா?" _

  • உன் அப்பா அம்மா முதலியார் சாதி. நீயோ ஒட்ட சாதி, இருந்தாலும் பரவாயில்லை.

'பள்ளி முடிந்ததும் என் அறைக்கு வா, தவறிய செய்யுள்களை என் முன் மனப்பாடஞ் செய். நீ சரியாக ஒப்புவித்த பிறகே, நான் வீட்டுக்குப் போவேன்' என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து பாடம் நடத்தினார். திரு.நரசிம்மாச்சாரியார் பயன்படுத்திய சொல், இக்காலத்திற்கு ஏற்காதது. இக்காலத்திலும் பலருக்குச் சினத்தை மூட்டியிருக்கும். என்னைப் பொறுத்தமட்டில் என் உள்ளத்தில் தைக்கவில்லை. ஏன்? இவ்வசவைப் பெறும்போது நான் புதிய மனிதனாகிவிட்டேன். 'முதலியார் உயர்ந்த சாதி என்ற உணர்வினை அடியோடு உதிர்த்துவிட்டேன். H ஒன்றை மேலென்று ஏற்றுக்கொள்ளாதபோது, மற்றொன்றைக் கீழ் என்று கருதும் இழிந்த போக்கிற்கு இடமேது? ஞானிகள், பொன்னையும் ஒட்டையும் ஒப்பாகவே கருதுவார் களாம். சாதியைப் பொறுத்தமட்டில், அப்போதே ஐம்பதாண்டு களுக்கு முன்னே நான் அந்நிலைக்குச் சமைந்துவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/96&oldid=787803" இலிருந்து மீள்விக்கப்பட்டது