பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தாவடி வேலு 57 - _ கொடுமையினை, அவர் நம் தாய்த் தமிழில் சொல்லும்போது கேட்போர் கண்கள் குளமாகும். ஒரு மாலைப்பொழுது இப்படி அருளாளர் மெக்லீன் பேசிக் கொண்டிருந்தார். பேசிய இடம் இரட்டை மண்டப மூலை. அம்மூலை என் வீட்டிற்கு அருகில் இருந்தது. ஆகவே நானும் அங்குச் சென்றேன். பேச்சில் மெய் மறந்து நின்றேன். கூட்டம் பெரிதல்ல; பத்துப் பன்னிரண்டு பேர்களே இருந்தனர். அதில் நான்கு ஐந்து பேர்கள் சிறுவர்கள். அப்பொடியன்கள் சில மணித்துளிகள்வரை பொறுமையாகப் பேச்சைக் கேட்டார்கள், அப்புறம்? மெல்லக் குனிந்தார்கள் கைகள் மண்ணை வாரின; நொடியில் வீசினர். மெக்லீனின் முகத்தை நோக்கிப் பாய்ந்தது மண். பெரியவர்கள் யாரும் அதைக் கண்டு கொதிப்படையவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய ஞானிகள் போலும். இளைஞனாகிய எனக்கு வெகுளி பொங்கிற்று. 'சிறுமை கண்டு பொங்குவது, பிழைக்கத் தெரியாமை' என்று அப்போது எவரும், எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. எனவே கொந்தளிக்கும் கோபத்தோடு, பையன்கள் இருவருடைய கைகளைப் பிடித்தேன். அவர்களை நான் ஏதும் செய்யாதிருக்க முடியுமா என்று சிந்திக்கவும் நேரமில்லை. மறுநொடி, குறிப்பு:மொழி பேசிற்று. திரு. மெக்லீன், அவர்களை விட்டுவிடும்படி குறிப்பால் உணர்த்தினார். அவர் கட்டளையை மீற விரும்பவில்லை. இருவரையும் விட்டுவிட்டேன். சமய உரை தொடர்ந்தது. அவர் பதற்றம் ஏதும் இல்லாமல் பேசினார். முடிவில் தந்தையே! அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். ஆகவே அவர்களை மன்னியுங்கள் என்று வேண்டினார். - இது ஏசுநாதரின் பிரார்த்தனை: இதை நான் பைபிள் பாடத்தில் 'லமுறை படித்திருக்கிறேன். அவ்வேண்டுதலை, பொருத்தமாக, திரு மெக்லீன் தனதாக்கிக் கொண்டது என் உள்ளத்தை உருக்கிற்று. ം: செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பினர் ஒருவரை க்ேகு நேர் கண்டு மகிழும் பேறு கிட்டிற்று. தின்னர் என் வாழ்க்கை நெடுகிலும், ஒருவர் மாற்றி ஒருவர் முதுகில் குத்திய போதெல்லாம் அருளாளர் மெக்லீன் என் மனக்கண்ணில் தோன்றுவார். இந்நிகழ்ச்சி நிழலாடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/99&oldid=787806" இலிருந்து மீள்விக்கப்பட்டது