பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைக்கு என்னை ஆயத்தப் படுத்திற்று என்பது மிகையன்று. s

தொடக்கத்தில், புறக்கணிக்கப்பட்ட நாட்டுப் புறச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு நான் பண்பட்டேன். த டபுடல் ஏதும் இல்லாத அக்கால நாட்டுப்புறங்களில் நல்லோர் பலர், இலைமறை காய்களாக இருந்ததை உணர்ந்தேன்.

பின்னர் கல்வித்துறையின் முதற் படிக்கட்டில் அடி எடுத்து வைத்தேன். தொடக்கப் பள்ளிகளில் அமைதியாக அரும்பணி ஆற்றும் நல்லாசிரியர்களை எளிய உருவங்களில் கண்டேன். அத் தொண்டர்களின் தோழமை என்பால் சமத்துவ உணர்வைப் பெருக்கிற்று. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ‘ என்னும் முழு நம்பிக்கையை வளர்த்தது. மெய்யான சமத்துவத் தோழமை இரு சாராரிடமும் செயல் திறனைப் பெருக்கிற்று. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வளர்த்த நம்பிக்கை வெளிச்சத்தில் வீறு நடை போட்டேன். வஞ்சனையின்றித் தன்நினைவு கெட்டு - கல்வித் தொண்டிற்குப் பித்தனானேன்.

அடுத்து, மாவட்டக்கல்வி அலுவலர் என்னும் பெரும் வாய்ப்பு வந்து கூடிற்று. பெருமைப்படுவதற்குப் பதில் பெரியன செய்ய முயன்றேன். பொதுநலக் கண்ணோட்டமுடைய நல்லோர் சிலரின் ஒத்துழைப்பும் ஆதரவும் உதவின. கண்ட இடர்ப்பாடுகளும் உண்டு.

‘ஞாலங் கருதினுங் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின் என்னும் குறள் மின்னி என்னை நிலைப்படுத்தியது; நம்பிக்கையை ஊட்டியது; மேலும் அகன்ற பார்வையைத் தந்தது.

சிகாகுளம், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டறிவு பெற்றேன். பின்னர், எந்தப் பதவியைத் தொட அஞ்சினேனோ, அப்பதவி என்னை வலிய வந்து தழுவிக் கொண்டது. சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர் பதவி, நல்ல தமிழர் என்பதற்காக என்னைப் பற்றிக் கொண்டது. அந்த மதிப்பீடு தவறாகவில்லை. அப்பதவியிலிருந்ததால், எனக்கு மக்கள் தொடர்பு விரிந்தது; ஆழ வேரூன்றியது.

அறைகூவல்கள் ஆட்களின் அளவு கோல்கள் எனலாம்; மூதறிஞர்

இாாசாசி கொண்டுவந்த புது முறைத் தொடக்கக் கல்வி என்னைப் பதம் பார்த்தது. நான் வளர்த்துக் கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு என்னைக் காத்தது. மூதறிஞரின் நன்மதிப்பைப் பெற உதவிற்று; நான்

ாநில 1, அறிந்த மனிதன் ஆனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/10&oldid=622952" இலிருந்து மீள்விக்கப்பட்டது