பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நினைவு அலைகள்

எழுதிய கை, வேறு எவருக்கும் எழுதாது என்று கூறி, கரு முத்து தியாகராயர் தமிழ்நாடு இதழுக்கு ஆசிரியராக அழைத்த போது அந்த அழைப்பினை மறுத்துவிட்டார்.

பெரியாரிடம் பெற்ற ஊதியம். ரூ. 150 தியாயகராயர் அளிக்க முன் வந்தது ரூ. 1500. இத்தகைய தியாகம் இளம் காதுகளில் வீழ்ந்தால், சிலராவது அம் மரபினைப் பயிரிடுவார்கள்.

கடைசியில் குருசாமி கண்ட பலன்?

சர். பன்னிர் செல்வத்தின் மறைவைக் கேட்டுத், தந்தை பெரியார், ‘மனைவி நாகம்மாள் மறைந்தபோது நான் கண்ணிர் சிந்தவில்லை. என் தாயார் மறைந்த போது இயற்கை யென்று இருந்து விட்டேன். அண்ணார் மகன் இலண்டனில் படித்து விட்டுத் திரும்பியதும் இருபது வயதில் இறந்தபோதும் கலங்கவில்லை. தமிழர்களுக்குப் பாடுபட சர். செல்வத்திற்குப் பின் யார்? யார் தமிழர் நிலைமையைக் காணும் தோறும் காணுந்தோறும், எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் நெஞ்சம் பதறுகிறது’ என்று எழுதினார். பன்னிர் செல்வத்தை எத்தனை பேருக்கு அறிமுகப் படுத்தினோம்?

முந்தையர் ஆக்கிய ஓவியச் செல்வத்தை அழித்து, முடியாவிட்டால் மறைத்து, தமிழ் நாடகத்தை அழிக்க முயன்று, அதில் பெரிய வெற்றியும் பெற்றால் நாடகத் தமிழ் சொல் வழக்காகவே இன்றும் கிடக்கிறது.

ஆதி தமிழனின் காட்டுக் காலப் போக்கு எவ்வளவு காலத்திற்கு இளமையோடு பீடுநடை போடுவது?

நிற்க, மீண்டும் ராஜாமுக்குப் போவோம்! ராஜாம் குடியிருப்பின் தொலைவு பற்றியும், ஊர்ப் பள்ளியில் கூடுதலாக, மானாக்கர்களைச் சேர்க்க இயலாமை பற்றியும் குடியிருப்பிற்குத் தனியாக ஒரு தொடக்கப் பள்ளி தேவைப்பட்டது.

12. மொட்டைக் கடிதம்

ஆந்திரப் பள்ளிக்கு ஆணை பிறந்தது

ராஜாம் ஆதி ஆந்திரர் குடியிருப்பிற்குத் தனியாக ஒரு தொடக்கப் பள்ளி தேவை என்பதை உணர்ந்த நான்,

‘விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சிக் குழு, மற்றோர் பள்ளியை இங்கே தொடங்குமா?’ என்று வந்திருந்தவர்களைக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/100&oldid=622953" இலிருந்து மீள்விக்கப்பட்டது