பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நினைவு அலைகள்

ராஜாம் பள்ளியைப் பொறுத்த மட்டில், ஒன்றே முக்கால் கல் தொலைவு இருப்பதால், ஒப்புக்கொள்ளலாமென்று எனக்குத் தோன்றிற்று.

அதற்குக் குறுக்கே இன்னும் ஒரு விதி தடையாக வந்து நின்றது. பள்ளிக்கூடம் நடக்கும் பகுதிக்கும் பள்ளி கேட்கும் பகுதிக்கும் இடையிலான தொலைவு எவ்வளவு பெரியதாயினும் இரு பகுதிகளும் “வருவாய்த் துறைக் கணக்கில் ஒரே ஊராகக் கணக்கிடப்பட்டால், புதிய பள்ளியைத் திறக்க ஒப்புதல் அளிக்கக் கூடாது.

இந்த விதியை என் அலுவலகத் தலைமை எழுத்தர் கொண்டு வந்து காட்டினார்.

அவரா அவ் விதையை உருவாக்கியவர்? எவரோ போட்டதை அவர் காட்டினார். அதுவும் கடமை பற்றிக் காட்டினார்.

அத் தடையைச் சுற்றி வளைத்துச் செல்வது, எப்படி என்று கேட்டேன்.

சிலரைப்போல் காலைத் தொட்டுக் கும்பிட்டே காலம் தள்ளும் தலைமுறையினர் அல்லர் அவர். கடைசிப் படிக்கட்டில் இருந்து முறையாகக் கற்றுக் கற்று, முன்னேறியவர்.

எனவே, ராஜாம் சிக்கலுக்கு வழி ஒன்றும் சொன்னார். அது என்ன? ‘ஒரே ஊரில் இரண்டாவது தொடக்கப்பள்ளி தேவைப்பட்டால், மண்டலப் பள்ளி ஆய்வாளர் மட்டுமே அதைக் கொடுக்கலாம்’ என்ற விதியைக் கொண்டு வந்து காட்டினார்.

எனக்குப் பிடி கிடைத்தது. ஆதி ஆந்திரர்களின் குடியிருப்பில் தொடக்கப் பள்ளி தேவை என்பதை ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தையும் ஒப்புதல் இல்லாது நடக்கும் குடியிருப்புப் பள்ளியையும் நேரில் பார்த்த பிறகே உணர்ந்தேன்; அய்ந்தாண்டுகளாக அது மறுக்கப்பட்டது, எதன் பொருட்டு?

மாவட்ட ஆட்சிக்குழு இசையவில்லை என்ற காரணத்தால்.

ஏற்கெனவே உள்ள பள்ளியில் இடவசதி பெருகவில்லை.

அந்த அய்ந்து ஆண்டுகளாக, ஆதி ஆந்திரர்களின் தொடக்கக் கல்விக்கு எந்த ஏற்பாடும் செய்யமுடியவில்லை.

அப்படியிருக்க அவர்கள் மறுப்பினைமேலும் மதிக்கத்

தேவையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/102&oldid=622955" இலிருந்து மீள்விக்கப்பட்டது