பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 91

பின்னர், என்னுடைய சேமிப்புக் கணக்கைக் காட்டினேன்.

மெல்லிக்குப் புறப்பட்ட நாளன்று ஆயிரம் ரூபாய்களை வங்கியில் டிருந்து எடுத்தது, என் சேமிப்புக் கணக்கில் குறிக்கப்பட்டு இருந்தது.

இத்தகைய பதிவுகள் இல்லாமல் போயிருந்தால் என்மேல் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.

சாசரி மனிதனுடைய விழிப்பிற்கு மேலான விழிப்போடு செயல் பட்டதால் என் நாணயம் கேள்விக் குறியாகவில்லை.

வெள்ளையருக்குப் புரியவில்லை

பதிவேடுகளை என்னிடம் திருப்பிக் கொடுத்த சப்கலெக்டர் கிராலி ‘()தைப்பற்றி மனம் நோக வேண்டாம்; துச்சமாகத் தள்ளி விடுங்கள். வள் உங்கள் மக்கள், இத்தகைய கீழறுப்பு வேலைகளில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை’ என்று ஆறுதல்

கூறினார்.

அந்தக் கயமைச் செயல் எவருடையதாக இருக்கும்? இதே சlதனையில் சில நாள்களைக் கழித்தேன்.

மொட்டைக் கடிதம் எழுதியவரை அடையாளம் கண்டுவிட்டேன்.

அவர் யார்? சீகாகுளம் கல்வி மாவட்டத்தின் ஆய்வாளர்களில் முருவர் மட்டுமே பார்ப்பனரல்லாதவர்கள்.

அவர்களில் ஒருவர் என்னை முதுகில் குத்த முயன்று இருக்கிறார்.

இருவரில் எவர் என்பதைக் கண்டு பிடித்தபோது தமிழனின் பழிவாங்கும் புத்தி என்னிடம் மேலோங்கிற்று,

தியாக உள்ளம் படைத்த தியாகராயர்

அடுத்த நொடி, பெருமைக்கு உரிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்று மின்னிற்று.

நான் வெட்கித் தலைகுனிந்தேன். பழி வாங்காமல் செயல் பட்டேன்.

என்னை ‘மனிதனாக்கிய வரலாற்றுப் பெருமைமிக்க நிகழ்ச்சி என்ன?

தமிழ் நாட்டில் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் தியாகராயச் செட் டியார், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேச முதலியார் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/107&oldid=622960" இலிருந்து மீள்விக்கப்பட்டது