பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ெ து. சுந்தரவடிவேலு 95

‘'எதுவும் கிடைக்காத, பாடாவதி சிற்றுாரில் சிக்கிக்கொண்டிருக் விறோம். ஊர், நிலையத்திற்கு நெடுந்துாரத்தில் இருப்பதால் எதையும் வாவழைத்துக் கொடுக்க வாய்ப்பில்லை’ என்று அவர் மிகவும் வருந்தினார்.

வப்படியாவது, இந்த வண்டியைத் தெக்கலி சந்திப்புவரை கொண்டு போய் நிறுத்த முயல்கிறேன். அதுவரை தடம் எப்படி முருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அடுத்த நிலையங்களோடு, தொடர்பு கொள்ளப் பார்க்கிறேன். தெக்கலி போய் விட்டால், பயணிகளுக்குச் சிற்றுண்டிக்காகிலும் ஏற்பாடு செய்து விடலாம்.’ _iறு கனிவோடு காவலர் கூறவும், எங்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. நாங்களே எங்களை அறிமுகம் செய்து கொண்டோம் ‘போர் ஆதாவுப் பணியில் ஈடுபட்டுள்ள அம் மகாரு என்றதும் அவரது சுயசுறுப்பு அதிகமாயிற்று.

தொடர்பு கொள்ள வேண்டியவர்களோடு தொடர்பு கொண்டு, ஆணை பெற்று, புகைவண்டியை, மெல்ல தெக்கலிவரை கொண்டு பசர்த்தனர்.

அப்போது இரவு எட்டு மணிக்கு மேல் இருக்கும். முன் கூட்டியே, காவலர் தெக்கலிக்குத் தகவல் கொடுத்திருந்ததால், வருக்கு உணவு கிடைத்தது.

இரவு முழுவதும் வண்டி நகராது. தெக்கலிக்குத் தெற்கே உள்ள வசதாரா ஆற்றுப்பெருக்கு குறைந்த பிறகு பகலில் புகைவண்டியை முட்ட முயல்வதாகக் காவலர் கூறினார்.

மறுநாள் காலையும் வண்டி புறப்படவில்லை. சிற்றுண்டியும் பகல் _ாவும் வண்டியிலேயே. பாதுகாப்பாக, இருக்கிறோமே என்று

ஆறுதல் பெற்றோம்.

ஆசிரியர் இருவரின் பாசம்

பிற்பகல் வண்டி, தெற்கு நோக்கி நகர்ந்தது; இருட்டும் வேளை, ஆமதால வலசாவை அடைந்தது; களைப்போடு வண்டியைவிட்டு யறங்கினோம்.

இருவர் எங்களை நோக்கி, வேகமாக ஒடோடி வந்தனர்.

‘நமஸ்கார் பாபு சித்தம் என்று சொல்லியபடியே எங்கள் பெட்டிகளை வாங்கிக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/111&oldid=622965" இலிருந்து மீள்விக்கப்பட்டது