பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நினைவு அவை.

அடித்த புயல் கடுமையானது; விளைந்த சேதம் அதிகமானது அழிந்த பயிர், பரவலானது. சீகாகுளம் சாலை முழுவதும் மரங்கள் குறுக்கே வீழ்ந்து உள்ளன; வண்டிப் போக்குவரத்து கிடையா. மின்விசை அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது. i

‘எனவே, இரவு முழுவதும் இங்கேயே தங்கியாக வேண்டு அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இரவு எல்லாம் நாங்கள் உங்களுக்கு காவல் இருப்போம்’ என்று சொல்லிக் கொண்டே, (/த. வகுப்புப் பயணிகள் தங்கும் அறைக்கு எங்களைக் கொண்டு போ சேர்த்தார்கள்.

அவ்விருவரும் எவர்?

அருகாமையிலுள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள்

நானும் என் மனைவியும் நான்கு நாள்களுக்கு முன்பு வடக் . பயணம் போனதைக் கேள்விப்பட்டார்களாம். நான், திரு வேண்டிய நாளன்று புயல் வீசியதால், என்னைத் தேடிப் புகைவண் | நிலையத்திற்குத் தாமாகவே வந்தார்களாம்.

இவற்றையெல்லாம் கூறிவிட்டு,

‘பாபு எங்கள் வீட்டிலிருந்து எளிய உணவு கொண்டு வருகிறோ அதை உண்ட பிறகு உறங்குங்கள்; நாங்கள் இங்கேயே கா. . இருக்கிறோம்.

‘'நாளை சாலை சரியாக, நேரமானாலும் பரவாயில்லை. நாங்.. உடனிருந்து ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் விடுகிறோம்’ என்று எங்களுக்குத் தெம்பூட்டிவிட்டுச் சென்றார்கள். -

ஒரு மணிக்குள் உணவு வந்தது. தும்பை மலர் போன்ற சோறு, மனக்கும் நெய்; குழம்பு; சாறு; மோர். இவ்வளவும் கொண்டு வந்து பரிமாறினார்கள்.

மறுநாள் காலை; அவர்கள் சிற்றுண்டியை உண்டோம்; ப. உணவும் அவர்களுடையதே!

பிற்பகல் இரண்டு மணிக்கு, சீகாகுளம் அலுவலகத்திலிருந்து, இரு எழுத்தர்களும் இரு கடைநிலை ஊழியர்களும் எங்களைத் தே, ! வந்தார்கள். இடையிலே உள்ள நெடுஞ்சாலை, போக்குவத்துக் சரியாகவில்லை.

வழியில் வீழ்ந்து மறித்துக்கொண்டு இருக்கும் மரங்கவை

வெட்டிவிட்டு, வாகனங்கள் போகும் அளவு வழிசெய்ய, மேலும் டிா, நாள் ஆகுமென்ற செய்தியைக் கொண்டு வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/112&oldid=622966" இலிருந்து மீள்விக்கப்பட்டது