பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ெ து. சுந்தரவடிவேலு 97

நடந்தே திரும்பினோம்

பெட்டிகளை ஆமதாலவலசாவில் ஒப்படைத்துவிட்டு, என் மனைவியும் நானும் துணிந்து ஏழு கல் தொலைவும் நடந்து விடுவதென்று புறப்பட்டோம்.

எழுத்தர்கள், ஊழியர்கள், ‘இரு ஆசிரியர்கள் உடன்வர நீண்ட பயணத்தைத் தொடங்கினோம்.

அப்படி நடக்கும்போது, ஆதி மாந்தர் என்ன பாடுபட்டிருப்பார்கள் ான்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது.

ஆங்காங்கே, தடை நீக்கப்பட்ட சாலைத் திட்டுகள். பெரும்பாலான இடங்களில், வீழ்ந்து கிடக்கும் மரக் கிளைகளின் ாமல் ஏறி இறங்கி நடக்கவேண்டிய நிலை.

மற்றோர் இரவு, ஆமதாலவலசாவில் தங்கிவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றிற்று. பின்னடைவதானாலும் மரங்களைத் தாண்டி | க்கவேண்டும்.

எனவே, ஆனது ஆகட்டும் என்று பயணத்தைத் தொடர்ந்தோம். கோகுளம் எல்லையை நெருங்கும் நேரம் ஒரு குதிரை வண்டி கண்ணில் பட்டது.

கடைநிலை ஊழியர்கள் அதை அமர்த்திக் கொடுத்தார்கள், கடைசி கi, வண்டியில் சவாரி செய்து, வீடு சேர்ந்தோம்.

இளமை முறுக்கில் சமாளித்துவிட்டாலும், உடம்பு நோய் நீங்க ஒரு வாாம் பிடித்தது. -

ஸ்டேதம் வருகை

திடீரென, பொதுக்கல்வி இயக்குநர், சர் மெவரல் ஸ்டேதம் அவர்களின் சுற்றுப் பயணச் சுற்றறிக்கை எனக்கு வந்தது.

அவர், விசாகப்பட்டினம் வரையில் வந்து திரும்புவதாகக் காட்டிற்று.

என் அலுவல் பகுதிக்கு வருகை இல்லை; எனக்கு அறுப்புவானேன்.

‘இயக்குநர் உங்களை, விசாகப்பட்டின வருகையின்போது, கான விரும்பலாம்’ என்று தலைமை எழுத்தர் விளக்கம் சொன்னார். அது சரியாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/113&oldid=622967" இலிருந்து மீள்விக்கப்பட்டது