பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - நினைவு அலைகள்

குறிப்பிட்ட நாள்களில் விசாகையில் தங்கிப் பொதுக்கல்வி இயக்குநரைக் காண முடிவு செய்தேன்.

உரிமையோடு, அவ்வூர், மாவட்டக் கல்வி - அலுவலர் திரு சத்தியநாராயணாவுக்கு எழுதினேன். தம் வீட்டில் தங்கும்படி அழைத்தார். அப்படியே போய்த் தங்கினேன்.

உரிய நேரத்தில் இருவரும் புகைவண்டி நிலையத்தை

அடைந்தோம். இயக்குநர் வருவது, விசாகைக்கு.

எனவே, அவ்வூர் அலுவலர்கள் அவரை வரவேற்ற பிறகே, நான்

இயக்குநரை வரவேற்று மாலையிடுவது முறையென்று கருதினேன் சற்றுப் பின்னால் ஒதுங்கிக் காத்திருந்தேன்.

வண்டி நின்றதும், மண்டலக்கல்வி ஆய்வாளர், திரு. பத்ரய்யா முதலில் இறங்கினார். அவர் பார்வை, பின்னால் நின்று கொண்டிருந்த என்மேல் பட்டது.

சட்டென்று இறங்கினார்; மடமட என்று, மற்றவர்களைக் தள்ளிக்கொண்டு என்னிடம் வந்தார்.

‘இயக்குநர் உன்னைக் காண ஆவலாய் இருக்கிறார்; வராமற் போனால், தந்தி கொடுத்து, வரவழைக்கச் சொன்னார். . வந்திருப்பது அவருக்கு உடனே தெரியட்டும், நீ போய் மாலையிடு ‘ என்று கூறி என்னைத் தள்ளி விட்டார்.

அதற்குள் சத்யநாராயணா மாலையிட்டது எனக்கு நிறைவை. கொடுத்தது.

நான் ஒதுங்கிப்போனாலும், சூழ்நிலை, என்னைப் வேளைகளில் முன்னே தள்ளி விடுவதால், என்பால், பலர் காழ்ப் |

கொள்ள நேரிடுகிறது.

இயக்குநரின் பாராட்டு

நான் என்ன செய்ய?

விசாகையில் தங்கியிருந்தபோது, இயக்குநர் எனக்கு நீண்ட பேட் | தந்தார். என் அலுவல் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்ட பின்,

‘நீ நல்ல பணி செய்வதைப் பற்றி நான் கேள்விப்ப , மகிழ்கிறேன். நீ முழு மூன்றாண்டு காலம் சீகாகுளத்திலேயே தங்கநேரிடும். அதைக் கருத்தில்கொண்டு, திட்டந் தீட்டி, கல்வியை வளர்த்து வா’ இயக்குநருடைய அறிவுரையின் சுருக்கம் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/114&oldid=622968" இலிருந்து மீள்விக்கப்பட்டது